இணைய வாசிகள் எப்போதும் கொண்டாடும் மீம்களின் தலைவனுக்கு இன்று பிறந்தநாள்...! - இவரோட வயது என்ன தெரியுமா..?


இன்றைய இளசுகள் ஸ்டடி மெட்டீரியல்களை தேடுகிறார்களோ..? இல்லையோ மீம் மெட்டிரியல்களை வலை வீசி வலைதளத்தில் தேடுகிறார்கள்.

தமிழ்நாட்டில் நம்பர் 1 மீம் மெட்டிரியல் என்றால் அது நம்ம வைகைப்புயல் வடிவேலு தான். அதற்கு அடுத்த படியாக அதிகம் பிரபலமான மீம் மெட்டீரியல் என்றால் அது ஒசிட்டா ஐஹீம் (Osita Iheme) தான். 

நம்முடைய எல்லா வகையான ரியாக்ஷனுக்கும் அவரது முகம் பொருந்திப்போகும். அப்படி ஒரு முக அம்சத்தை கொண்டவர் ஒசிட்டா ஐஹீம். பலரும் இவரை எதோ சிறுவன் என நினைத்துக்கொண்டிருகிறார்கள்.

ஆனால், இவருடைய தற்போதைய வயது 38. ஆமாங்க.. அவருக்கு இப்போது 38 வயது ஆகின்றது. 

1982-ம் ஆண்டில் பிறந்தவர். நைஜீரியாவைச் சேர்ந்த ஒசிட்டா அந்நாட்டுத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர். தற்போது நெட்டிசன்கள் பயன்படுத்தும் அனைத்து படங்களுமே, அவரின் படத்தில் இடம்பெற்றவைதான். 


தனது 16 வயதிலேயே ‘ஆப்ரிக்காவின் ஆஸ்கார்’ என்று அறியப்படும் ஆப்பிரிக்கன் மூவி அகாடமி அவார்ட் நிகழ்வில் 1998-ம் ஆண்டு ஒசிட்டா ஐஹீமுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.


இன்று அவரின் பிறந்தநாள் என்பதால், நாடு, மொழி கடந்து அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இணைய வாசிகள் எப்போதும் கொண்டாடும் மீம்களின் தலைவனுக்கு இன்று பிறந்தநாள்...! - இவரோட வயது என்ன தெரியுமா..? இணைய வாசிகள் எப்போதும் கொண்டாடும் மீம்களின் தலைவனுக்கு இன்று பிறந்தநாள்...! - இவரோட வயது என்ன தெரியுமா..? Reviewed by Tamizhakam on February 20, 2020 Rating: 5
Powered by Blogger.