வினியோகஸ்தர்கள் ஆதங்கம்! - ரஜினி ரசிகர்கள் விளாசல்..!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "தர்பார்" படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள், படம் தோல்வியடைந்து விட்டது எனவும் நஷ்டஈடு வேண்டும் எனவும் கேட்கின்றனர். 

வினியோகஸ்தர்களில் ஒருவரான திருவேங்கடம் என்பவர் ''நானும், கண்ணன் என்பவரும், ஜி.கே., பிலிம்ஸ் என்ற வினியோக நிறுவனத்தை நடத்துகிறோம். ரஜினி மற்றும் முருகதாஸ் மீது நம்பிக்கை வைத்து, தர்பார் படத்தை பார்க்காமலேயே வாங்கினோம். ஆனால், படம் தரமாக இல்லாததால், படம் வெற்றி பெறவில்லை.' என்று கூறினார்.

இந்த படத்தை தயாரித்த லைகா நிறுவனம், படத்துடைய பட்ஜெட்டின் பெரும் பகுதியை, ரஜினி மற்றும் முருகதாஸுக்கு சம்பளமாக கொடுத்ததால், படத்தை தரமாக உருவாக்க முடியவில்லை என்கிறது. 

அதனால் தான் ரஜினி, முருகதாஸ் ஆகிய இருவரிடம் கோரிக்கை வைக்கிறோம் என்றார். இது குறித்து, லைகாவின் கருத்தை அறிய, அந்நிறுவன அதிகாரி சுந்தர்ராஜனை தொடர்புகொண்ட போது, சரியான சந்தர்ப்பத்தில் இது குறித்து பேசுவதாக தகவல் அனுப்பினார்.

இந்த விஷயத்தை அறிந்த ரஜினி ரசிகர்கள், ரஜினி அதிக சம்பளம் வாங்குகிறார் என்று உங்களுக்கு இன்று, நேற்று தான் தெரியுமா..? - படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது, என்றாலும் தொடர்ந்து 10 நாட்கள் விடுமுறை.இந்நிலையில், படத்திற்கு கலெக்ஷன் வரவில்லை. ரஜினி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்பது வேடிக்கையாக உள்ளது.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரஇருக்கும் இந்த நேரத்தில் அவரை டார்கெட் செய்து பணத்தை கேட்கிறீர்கள் என்று தோன்றுகின்றது. படத்தின் உண்மையான வசூல் என்ன என்பதை லைகா நிறுவனம் தீவிரமாக விசாரணை செய்து வெளியிட வேண்டும். ரஜினியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே சிலர் வேண்டுமென்றே இது போன்றவிஷயங்களில் ஈடுபடுகிறார்கள் என சமூகவலைத்தளங்கள் வாயிலாக பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகிறார்கள்.
Advertisement

Share it with your Friends