தனது காதலன் குறித்து எமோஷனலாக ஒரு விஷயத்தை வெளிப்படையாக கூறிய ப்ரியா பவானி ஷங்கர்.!


நடிகை ப்ரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமாவில் சென்சேஷனல் நாயகி. இவர் நடிப்பில் வெளியான, மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் ஆகிய படங்கள் அடுத்தடுத்து ஹிட்.

தற்போது, இந்தியன் 2 படத்தில் நடித்துவரும் இவரை சுற்றி எப்போதுமே ஒரு சர்ச்சை வளையம் வட்டமடித்துக்கொண்டே இருக்கின்றன. முதலில்,காதலனுடன் வெளிநாடு சென்று விட்டார் அங்கேயே திருமணம் செய்துகொண்டு செட்டிலாக போகிறார் என்றார்கள். 

பிறகு, சீரியல் நடிகர் கவின் தான் அந்த காதலன் என்றார்கள். சமீபத்தில், இயக்குனரும்,நடிகருமான எஸ்.ஜே.சூர்யா இவருக்கு லவ் ப்ரபோஸ் செய்தார் என கிளப்பி விட்டார்கள்.இப்படியாக,இவரை சுற்றி ஏதாவது ஒரு சர்ச்சை ஓடிக்கொண்டே இருக்கின்றது.

தற்போது, அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள "மாஃபியா" படத்தில் நடித்துள்ளார். வரும் 21-ம்தேதி இந்த படம் திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடந்து வருகின்றன.

இதற்காக இவர் கொடுத்த பேட்டி ஒன்றில், இவரின் காதல் குறித்து கேட்கப்பட்டது, இதில் காதலன் என்று வெளிப்படையாக கூறாமல், அவரை பற்றி பல நல்ல விஷயங்களை பகிர்ந்தார்.

அதில் குறிப்பாக ‘எந்த ஒரு பிரபல அந்தஸ்த்தும் இல்லாத நாளிலிருந்து எனக்கு அவரை தெரியும், அதுமட்டுமின்றி என்ன அப்பாவிற்கு பிறகு என்னை நன்றாக பார்த்துக்கொள்ள கூடியவர்.

ஏன், நமக்காக உயிரையே கொடுப்பார்கள் என்று சொல்வார்களே அப்படிப்பட்டவர் தான் அவர், இவை நான் காதலிக்கின்றேன், இல்லை என்பதற்காக இல்லை.

இந்த உறவை நான் என்றுமே மதிக்கின்றேன்’ என மிக எமோஷனலாக ப்ரியா பவானி ஷங்கர் பேசியுள்ளார்.
--Advertisement--

நீங்கள் CREDIT CARD பயன்படுத்துபவரா.?

இப்போதே 1000 ரூபாய் Reward மற்றும் ஏராளமான சலுகைகள் பெற்றிடுங்கள்

Step 1 : இந்த CRED லிங்க்-ஐ பயன்படுத்தி App-ஐ இன்ஸ்டால் செய்திடுங்கள்

Step 2 : உங்கள் CREDIT CARD மூலம் குறைந்த பட்சம் 10 ரூபாய் TRANSACTION செய்திடுங்கள்.

உங்கள் கணக்கில் 1000 ரூபாய் உடனடியாக Reward வந்துவிடும்...!

இப்போதே CRED APP-ஐ இன்ஸ்டால் செய்து 1,000 ரூபாய் Reward பெற்றிடுங்கள்

தனது காதலன் குறித்து எமோஷனலாக ஒரு விஷயத்தை வெளிப்படையாக கூறிய ப்ரியா பவானி ஷங்கர்.! தனது காதலன் குறித்து எமோஷனலாக ஒரு விஷயத்தை வெளிப்படையாக கூறிய ப்ரியா பவானி ஷங்கர்.! Reviewed by Tamizhakam on February 19, 2020 Rating: 5
Powered by Blogger.