அஜித்தின் குரல் போகும் நிலை - "துள்ளாத மனமும் துள்ளும்" பிரபல இயக்குனர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!


நடிகர் விஜய்யின் துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் இன்று தொலைகாட்சியில் ஒலிபரப்பு செய்யப்பட்டால் கூட TRP எகிறும். இந்த படத்தை இயக்கியதன் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் எழில்.

இந்த படத்தை தொடர்ந்து, பூவெல்லாம் உன் வாசம், ராஜா என நடிகர் அஜித்குமாரை வைத்து இரண்டு படங்களை இயக்குனர் எழில். இதில், பூவெல்லாம் உன் வாசம் படம் ஹிட் அடித்தது. ஆனால், ராஜா திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் எழில், ராஜா திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்றாலும் தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை கொடுத்தது.

மேலும், ஒரு முறை அஜித்திடம் கதை சொல்ல சென்ற போது அவருக்கு கழுத்து பகுதியில் ஒரு அறுவை சிகிச்சை நடைபெறவிருந்தது. மிகவும், ஆபத்தான அறுவை சிகிச்சை. அதில் சிறு தவறு நடந்தால் கூட அஜித்தின் குரல் போகும் நிலை இருந்தது என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் இயக்குனர் எழில்.
Advertisement

Share it with your Friends