தர்ஷனை லவ் பண்ணி இந்த பொண்ணுக்கு கிடைச்ச ஒரே நல்லது இது தான் - பிக்பாஸ் பிரபலம் ஒரே போடு..!


பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம், மிகவும் பிரபலமான தர்ஷன், கடந்த 2016 ஆம் ஆண்டு மிஸ் சவுத் இந்தியா அழகி பட்டம் பெற்ற பிரபல மாடலும், நடிகையுமான சனம் ஷெட்டியை காதலித்து வந்தார் என்பதை, சனம் ஷெட்டி பல்வேறு, பேட்டிகளில் வெளிப்படையாக தெரிவித்தார்.

ஆனால், பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருந்த போது, காதல் பற்றி பெரிதாக எதுவும் பேசாத தர்ஷன், வெளியே வரும் சமயத்தில் தான் தனக்கு ஒரு காதலி இருப்பதை வெளிப்படுத்தினார். ஆனால், சமீபத்தில் தான்இவர்களுக்கு நிச்சயதார்த்தம் எல்லாம் நடந்து முடிந்த விஷயம் தெரிய வந்திக்ருகிறது. 

பணம், புகழ் கிடைத்ததும் சில பல காரணங்களை கூறி ஷனம் ஷெட்டியிடம் இருந்து தர்ஷன் எஸ்கேப் ஆக முயற்சிக்கிறார் என்று மட்டும் தெளிவாக தெரிகின்றது. கேட்டால், பிகினி உடையில் பேட்டி கொடுத்தார், முன்னாள் காதலனுடன் பார்ட்டி செய்தார் என்று கூறுகிறார் தர்ஷன். 

உண்மை என்னவென்றால், நடிகை ஷனம் ஷெட்டி காட்டாத கவர்ச்சியே இல்லை. கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக திரைத்திரையில் இருக்கும் பல படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளார். பிகினி உடையில் பல போட்டோ ஷூட்களை நடத்தியுள்ளார். 

ஆனால், நான் பிக்பாஸ் வீட்டிற்குள் போன பிறகு ஷனம் ஷெட்டி பிகினி உடையில் பேட்டி கொடுத்தது எல்லாம் எனக்கு பிடிக்கவில்லை என்று கூறுகிறார் தர்ஷன். இந்நிலையில், இந்த விவாகரம் குறித்து பிக்பாஸ் பிரபலம் காஜல் பசுபதி, ஷனம் ஷெட்டிக்கு ஆதரவாக ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். 

அதில் அவர் கூறியிருப்பதாவது, தர்ஷனின் உணமையான குணம் திருமணத்திற்கு முன்பே தெரிய வந்தது உனக்கு நல்ல விஷயம் தான். திருமணத்திற்கு பிறகு இப்படி மாறியிருந்தால் உங்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.

தர்ஷனை லவ் பண்ணி இந்த பொண்ணுக்கு கிடைச்ச ஒரே நல்லது இது தான் - பிக்பாஸ் பிரபலம் ஒரே போடு..! தர்ஷனை லவ் பண்ணி இந்த பொண்ணுக்கு கிடைச்ச ஒரே நல்லது இது தான் - பிக்பாஸ் பிரபலம் ஒரே போடு..! Reviewed by Tamizhakam on February 03, 2020 Rating: 5
Powered by Blogger.