என் திருமணத்தில் விஜய்யை ரொம்ப மிஸ் பண்ணேன் - அஜித் பட நடிகர் உருக்கம்..!


தமிழ் சினிமா பிரபலங்கள் தங்களது திருமணத்தின் போது முன்னணி நடிகர்களை வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைப்பது வழக்கமான ஒன்று. அந்த வகையில் அண்மையில் நடிகர் மஹத் மற்றும் பிராச்சி திருமணம் நடந்து முடிந்தத. 

இதில், நடிகர் சிம்பு கலந்து கொண்டிருந்தது நமக்கு தெரியும். இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு தனது மனைவியுடன் பேட்டி அளித்திருந்த மஹத், என் சிறு வயதில் இருந்தே எனக்கு தமிழ் சினிமாவில் விஜய் அவர்களை மிகவும் பிடிக்கும்.

நான் விஜய் அண்ணாவை என் திருமணத்திற்கு அழைக்க முயற்சி செய்தேன் ஆனால் என்னால் அவரை தொடர்ப்பு கொள்ள இயலவில்லை. அதனால் என் திருமணத்தில் விஜய்யை நான் ரொம்ப மிஸ் பண்ணேன் என்று உருக்கமாக கூறினார் மஹத். 

மேலும் இவர் அஜித் நடித்த வெளிவந்த மங்காத்தா படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement

Share it with your Friends