தன் மீது புகார் கூறிய நடிகருடன் மீண்டும் ஜோடி சேரும் சாய்பல்லவி..! - ரசிகர்கள் வியப்பு..!


மாரி 2, என்ஜிகே படங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சாய் பல்லவிக்கு அந்த படங்கள் பெரிதாக கைகொடுக்கவில்லை. 

இருப்பினும், மாரி 2வில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது. அவரது நடனத்திற்கு தனி ரசிகர் வட்டம் உருவானது. 

இந்த நிலையில், தற்போது தெலுங்கில் நாக சைதன்யாவுடன் லவ் ஸ்டோரி, ராணாவுடன் விராட பர்வம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அடுத்தபடியாக நானியுடன் ஒரு படத்தில் நடிக்கிறார். 

ஏற்கனவே நானியுடன் நடித்த M.C.A., படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு சாய்பல்லவியை தெலுங்கு ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த படமாகவும் அமைந்தது. 

இந்நிலையில், தியா என்ற படத்தில் நாகஸௌரியா என்ற இளம் ஹீரோவுக்கு ஜோடியாக நடித்தார் சாய்பல்லவி. இந்த படம் வெளியாகி தோல்வியை தழுவியது. அப்போது, படத்தின் ஹீரோ நாகஸௌரியா, சாய்பல்லவி படப்பிடிப்பு தளத்தில் ஓவர் பந்தா பண்ணுகிறார். ஒழுங்காக பேசுவது கூட கிடையாது. எதற்கெடுத்தாலும் கோபப்படுவார் என்று அடுத்தடுத்து குற்ற சாட்டுகளை வைத்தார்.

கிட்டத்தட்ட அது உண்மை தான் என்பது போல பேசினார் M.C.A., படத்தில் சாய்பல்லவிக்கு ஜோடியாக நடித்த நடிகர் நாணி. ஆனால், தற்போது, மீண்டும் நானியுடன் நடிக்கும் படத்திலும் சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கவுள்ளார். . இந்த படத்தை டாக்ஸிவாலா என்ற தெலுங்கு படத்தை இயக்கிய ராகுல் சங்கிரித்தியன் இயக்குகிறார்.

--Advertisement--
Share it with your Friends