நீ எல்லாம் ஒரு ***** டா..? - பிக்பாஸ் தர்ஷனை கிழித்து தொங்கவிட்ட ஷனம் ஷெட்டி - வைரலாகும் ஆடியோ..!


பிக்பாஸ் தர்ஷனை நீ எல்லாம் ஒரு ஆம்பளையா டா..? என்று நடிகை ஷனம் ஷெட்டி கேள்வி கேட்கும் ஆடியோ ஒன்று இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

இதனை, கேட்ட நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். சிலர் தர்ஷனுக்கு ஆதரவாகவும் சிலர் ஷனம் ஷெட்டிற்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான விளம்பர பட நடிகர் தர்ஷனும் நடிகை ஷனம் ஷெட்டியும் காதலித்து வருகின்றனர் என்பது பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது தெரியவந்தது.

இந்நிலையில், அவர்கள் இருவருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாக நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்த விஷயம் அண்மையில் ஷனம் ஷெட்டி, தர்ஷன் குறித்து சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்த போது தெரியவந்தது.

இந்நிலையில், யார் மேல் தவறு என்று குழப்பமான சூழலில் நீயெல்லாம் ஒரு  ஆம்பளையா டா..? என்று கேட்கும் ஆடியோ வெளியாகியுள்ளது.
Advertisement

Share it with your Friends