ரசிகர்களுடன் தொடர்பில் இல்லை என்றாலும் அவர்களுக்கு அஜித் செய்ய நினைக்கும் விஷயம் - கொண்டாடும் ரசிகர்கள்


நடிகர் அஜித்திற்கு ஒரு காலத்தில் அங்கீகரிக்கப்ட்ட ரசிகர் மன்றங்கள் செயல்பட்டு வந்தன. ஆனால், கடந்த 2011-ம் ஆண்டு தன்னுடைய ரசிகர் மன்றங்களை கலைப்பதாக நடிகர் அஜித் அதிரடியாக அறிவித்தார்.

இதற்கு முக்கிய காரணம், அந்தந்த பகுதியில் இருக்கும் அஜீத் ரசிகர் மன்ற நிர்வாகிகள் அரசியல் கட்சிகளிடம் கூட்டு வைத்துக்கொண்டு அஜித் பெயரை பயன்படுத்தி அவரது ரசிகர்களிடம் வாக்கு சேகரிக்க முயன்ற விஷயம் தான். இது அஜித்திற்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

இதனால் தான் அதிரடியாக தனது ரசிகர் மன்றங்களை ஒரே நாளில் கலைத்துவிட்டார். மன்றங்களை கலைத்த பிறகும் இப்படியான பிரச்சனை ஒன்று சமீபத்தில் வந்தது. 

அப்போது, எனக்கும் அரசியலுக்கும் ஓட்டு போடுவதை தவிர பெரிய  தொடர்பு எதுவும் இல்லை. என்னுடைய ரசிகர்கள் அரசியல் விரும்பினால் அது அவர்களது தனிப்பட்ட விருப்பு, வெறுப்பின் அடிப்படையில் அமைய வேண்டுமே தவிர என்னுடைய பெயரை பயன்படுத்த வேண்டாம் என ஒரே போடாக போட்டார்.

இந்நிலையில், விஸ்வாசம் படப்பிடிப்பு நேரத்தில் அஜித் ஒரு விஷயத்தை கூறியதாக ரோபோ ஷங்கர் கொடுத்த பேட்டி கொண்டு இப்போது வைரலாகி வருகிறது.

அதில், நடிகர் அஜித் ரசிகர்களுக்காக நான் என்ன செய்ய போகிறேன் என்று ரோபோ ஷங்கரிடம் கேட்டுள்ளார். உடனே ரோபோ ஷங்கர் வருடத்திற்கு வருடம் ஒரு படம் வெளியிடுங்கள் அதுவே ரசிகர்களுக்கு போதும், அவர்கள் கொண்டாடுவார்கள் என்று கூறினாராம்.

அஜித்தும் ரசிகர்களுக்காக கண்டிப்பாக நான் தொடர்ந்து படம் நடிப்பேன் என்று கூறினாராம்.இந்த வீடியோ இப்போது வைரலாக ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.
Advertisement

Share it with your Friends