சிம்புவின் பெயரை மாற்றினார் அப்பா டி.ராஜேந்தர் - என்ன காரணம்..? - புதிய பெயர் என்ன தெரியுமா..?


நடிகர் சிம்பு பெயரை கேட்டாலே இன்னிக்கு என்ன வம்பு என்று தான் பலரும் யோசிப்பார்கள். அந்த அளவுக்கு தன்னை சுற்றி சர்ச்சை வளையத்தை வைத்திருப்பவர் நடிகர் சிம்பு.

அஜித், விஜய் போல தனக்கென வெறித்தனமான ரசிகர்களை வைத்திருப்பவர் சிம்பு. ஆனால், அவர்களை பற்றி இவருக்கு கவலை இல்லை.

படங்களில் கமிட்டாகி அந்த படம் முடியுமா..? முடியாதா..? ரிலீஸ் ஆகுமா..? ஆகாதா..? ட்ராப் ஆகி விடுமா..? அல்லது தொடர்ந்து படப்பிடிப்பு நடக்குமா..? இல்லை, நடுவுல வேறு ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி விடுவாரா...? இப்படி தான் சிம்புவின் சினிமா பயணம் கேப்டன் இல்லாத கப்பல் போல காற்றடிக்கும் திசையில் நகர்ந்து கொண்டிருக்கின்றது.

இந்நிலையில், இவரது பெயரில் சிறிய மாற்றத்தை அவரது தந்தை டி.ராஜேந்தர் செய்துள்ளார். சிலம்பரசன் என்ற பெயரை நியூமரலாஜியின் அடிப்படையில் S.T.R என்று முதலில் மாற்றினார். படங்களிலும் S.T.R என்றே இவரது பெயர் பயன் படுத்தப்பட்டது.

இப்போது, S.T.R., என்பதை சிலம்பரசன்.T.R., என்று மாற்றம் செய்துள்ளார் டி.ராஜேந்தர். ஜோதிடம் மற்றும் எண் கணித அடிப்படையில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அடுத்தடுத்த படங்களில் சிலம்பரசன்.T.R., என்றே சிம்புவின் பெயர் பயன்படுத்தப்படும் என்றும் கூறுகிறார்கள்.
Advertisement

Share it with your Friends