அவரோட தம்பி டா...! - நான் தான்டா செய்வேன்-ன்னு சொன்னது இதத்தானா..? - நல்ல செஞ்சு விட்டியே தல..!


மாஸ் நடிகரின் படத்திலிருந்து சமீபத்தில் வெளியான பாடல் மாஸ் காட்டிக்கொண்டிருகின்றது. பட்டிதொட்டியெங்கும் இந்த பாட்டு தான் வைரல். சில நாட்களுக்கு முன்பு நடிகர் வீட்டில் சோதனை எல்லாம் நடைபெற்றது. 

இதற்கு காரணம் சினிமா பைனானசியர் என்று கூறினார்கள். அதற்கு ஒரு படி மேலே சென்று அரசு தான் மாஸ் நடிகரை பழி வாங்குகிறது என இதிலும் அரசியல் செய்து மாஸ் நடிகரின் ரசிகர்கள் ஓட்டுக்களை குறிவைத்து காய் நகர்த்தின சில கட்சிகள். 

ஆனால், ஆவணங்கள் வெளியான பின்பு அந்த கட்சிகள் கப் சிப் ஆகி விட்டன. இப்போது தான் இந்த விவாகரத்திற்கு முழு முதல் காரண கர்த்தாவே அந்த காப்பி இயக்குனர் செய்த வேலை தான் என்று தெரியவந்துள்ளது.

சமீபத்தில் வெளியான விளையாட்டு படத்தின் பட்ஜெட்டை தாறுமாறாக எகிற வைத்து, கால் போன போக்கில் செல்வது போல பணத்தை வாரி இறைத்து விட்டது தான் காப்பி இயக்குனர் செய்த மிகப்பெரிய தவறு. 

சரி, செலவு செய்தது பற்றி கூட பிரச்சனையில்லை. ஆனால், அதற்கு கணக்கு வழக்கு சரியாக கொடுக்க வேண்டும் அல்லாவா..? அதிலும் எடக்கு மடக்காக கணக்கு காட்டியுள்ளது தான் மேலிடம் வரை சென்று தயாரிப்பாளர் முதல் ஹீரோ வரை சிக்கிக்கொண்டு சீக்கியடிக்கும் நிலைக்கு தள்ளி விட்டது. 

அதிக பட்சம் 50 கோடியில் முடிக்க வேண்டிய படத்தை கிராபிக்ஸ் பண்றேன், அத பண்றேன், இத பண்றேன் என ஏகத்துக்கும் இழுத்து கொண்டு போய் 200 கோடி பக்கமாக சென்று விட்டார் எனவும். பிறகு, விஷயத்தில் மாஸ் நடிகர் நேரடியாக தலையிட்டு ப்ரேக் போட்டு நிறுத்தினார் எனவும் கூறுகிறார். 

இல்லையென்றால் 200 கோடியையும் தாண்டி விஷயம் விபரீதமாகியிருக்கும் என்கிறார்கள். மாஸ் நடிகர் மீது மதமாற்ற புகார் வந்த போது அவர் பெயர் கொண்ட இன்னொரு நடிகர் கூட குரல் கொடுத்தார் ஆனால், தம்பி டா.. நான் தான் டா செய்வேன்-ன்னு மேடையில் பேசி கைதட்டலை வாங்கிய அவர் வாயே திறக்காமல் கமுக்கமாக இருந்து விட்டார். 

தற்போது, வட நாட்டு நடிகர் ஒருவரிடம் ஒரு கதையை சொல்லி விட்டு அவரையே சுற்றி சுற்றி வருகிறாராம். எப்படியாவது அவர் ஓகே சொல்லி விட்டால் ஒரு ஹிட் படம் கொடுத்து அப்படியே மும்பையிலேயே செட்டில் ஆகி விடலாம் என ப்ளான் போட்டுள்ளாராம் சார். 

ஆனால், விசாரித்த வரை காப்பி இயக்குனர் மீது நெகடிவ் ரிப்போர்ட்டுகளே வருவதால் அமைதியாக இருக்கிறாராம் அந்த வட நாட்டு நடிகர். இந்நிலையில், இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வரும் அந்த பாடல் குறித்து எந்த கருத்தையும் கூறாமல் ஊரை சுற்றி வருகிறார் காப்பி. 

இதனை அறிந்த மாஸ் நடிகரின் ரசிகர்கள், ஏன் எந்த கருத்தையும் சொல்ல மாட்டேன் என்கிறீர்கள் என்று மடக்கிபிடித்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால், வாயே திறக்காமல் மனைவியுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படங்களை மட்டும் அப்லோட் செய்து வருகிறார். 

நான் அவரோட தம்பி டா.. நான் தான் செய்வேன்-ன்னு சொன்னியே தல..! நல்லா செஞ்சு விட்டுட்டீங்க போங்க..!

அவரோட தம்பி டா...! - நான் தான்டா செய்வேன்-ன்னு சொன்னது இதத்தானா..? - நல்ல செஞ்சு விட்டியே தல..! அவரோட தம்பி டா...! - நான் தான்டா செய்வேன்-ன்னு சொன்னது இதத்தானா..? - நல்ல செஞ்சு விட்டியே தல..! Reviewed by Tamizhakam on February 18, 2020 Rating: 5
Powered by Blogger.