புடவையில் பின்னழகை காட்டி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்த நடிகை சமந்தா..! - வைரல் போட்டோஸ்..!


விஜய் சேதுபதி - த்ரிஷா நடித்த ‛96' படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‛ஜானு'வில் சர்வானந்தும், சமந்தாவும் நடித்துள்ளனர். இப்படம், வரும் 14-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தின் டீசர் வெளியானதில் இருந்தே த்ரிஷா நடிப்புடன் சமந்தாவை ஒப்பிட்டு பேசி வருகிறார்கள். 

இந்த நிலையில் தான் அளித்த ஒரு பேட்டியில் சமந்த கூறியதாவது: இதுவரை நான் நடித்த அனைத்து படங்களையும் விட சிறப்பான நடிப்பை இந்த படத்தில் கொடுத்திருக்கிறேன். முக்கியமாக திரிஷாவின் நடிப்பை நகலெடுக்க விரும்பாமல் எனது சாயலில் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறேன். 

அதனால் அவரது நடிப்பில் இருந்து ஜானுவில் மாறுபட்ட சமந்தாவை பார்க்கலாம். 96 படத்தைப் பொறுத்தவரை த்ரிஷா சிறப்பாக நடித்திருந்தார். அதில் எந்த மாற்றமும் இல்லை. 


ஆனபோதும ஜானு படம் பார்க்க தியேட்டருக்கு வரும் ரசிகர்கள், த்ரிஷாவை மறந்து விடுவார்கள். ஜானுவான சமந்தாவைத்தான் மனதில் கொள்வார்கள். அந்த அளவுக்கு சர்வானந்துடன் எனது கெமிஸ்ட்ரி பல அதிசயங்களை வெளிப்படுத்தியிருக்கிறது என தெரிவித்துள்ளார்.


இந்த படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் நடிகை சமந்தா புடவை சகிதமாக வந்து ரசிகர்களை கவர்கிறார். இந்நிலையில், புடவையில் தன்னுடைய பின்னழகை காட்டியபடி போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்துள்ளார் சமந்தா.

Advertisement

Share it with your Friends