இது வேற லெவல் - மாஸ் காட்டிய மாஸ்டர் - "குட்டி ஸ்டோரி" படத்தை "பெரிய ஸ்டோரி"..! - இதோ விபரம்..!


நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகவுள்ள இந்த படத்தின் சிங்கிள் ட்ராக் நேற்று வெளியானது. 

அதிலும் காதலர் தின ஸ்பெஷலாக இப்படத்தில் இடம்பெறும் "லெட் மி சிங் எ குட்டி ஸ்டோரி" பாடல் வெளியாகி இருந்தது. இதில் நடிகர் விஜய் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் ஸ்டைலிஷ்ஷாக, லெத்தார்ஜிக்காக பாட பாடலே செம டிரண்டிங்கில் உள்ளது. 

அநேகமாக, வாங்கனா வணக்கங்கனா பாடல் போல போதையில் பாடும் பாடலாக இது இருக்கலாம் என்று தோன்றுகின்றது. இந்த பாடல் வெளியானது முதல், ஒவ்வொரு மணி நேரமும் பாடல் யூடியூபில் பல சாதனைகள் செய்கிறது. 

5 நிமிடத்திலேயே 1 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ், குறுகிய நேரத்தில் 1 மில்லியன் ஹிட்ஸ் என பல சாதனைகளை செய்திருந்தது. 

தற்போது 24 மணிநேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்களில் குட்டி கதை பாடல் 3வது இடத்தை பிடித்து மாஸ் காட்டியுள்ளது. இது ரசிகர்களுக்கு மேலும் கொண்டாட்ட செய்தியாக அமைந்துள்ளது.
Advertisement

Share it with your Friends