குடி.. குடி.. குடி.. - பகலிலும் குடிக்க தொடங்கிய இளம் நடிகை - உச் கொட்டும் கோடம்பாக்கம்..!


தமிழ் சினிமாவில் கிடுகிடுவென வளர்ந்த நடிகை அவர். பொதுவாக திடீர் பிரபலமான, திடீரென வளர்ந்த நடிகர்,நடிகைகள் பலரும் ஒரு நாள் திடீரென காணாமல் போய்விடுவார்கள்.

அந்த லிஸ்டில் தன்னையும் இணைத்து கொண்டிருக்கிறார் அம்மணி. இவர் நடித்த முதல் படம் ஊருக்கு ஒதுக்கு புறமாக இருக்கும் அரங்குகளில் தான் ஓடியது. இதனால், அம்மணியின் பெயர் ஏகத்துக்கும் அடி வாங்கியது. ஆனால், இளசுகள் மத்தியில் நல்ல பிரபலம் ஆகி விட்டார்.

அதனை தொடர்ந்து, தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் அளவுக்கு வளர்ந்தார். இந்நிலையில், இயக்குனர் ஒருவருடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார். யாரு கண்ணு பட்டதோ தெரியவில்லை. திருமணம் ஆன வேகத்தில் விவாகரத்தும் செய்து விட்டார்.

தற்போது, ஒண்டிக்கட்டையாக இருக்கும் அம்மணிக்கு பட வாய்ப்புகள் சுத்தமாக வருவது கிடையாது. விவாகரத்து செய்த கணவரின் அப்பா சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர் என்பதால் இவருக்கு பட வாய்புகள் கொடுக்க பல இயக்குனர்கள் தயங்குகிறார்கள்.

இதனால், பட வாய்ப்புக்காக ஆடைகளை துறந்தார் அம்மணி. ஆனால், படம் பப்படம் ஆகிவிட்டது. இவ்வளவு செய்து பட வாய்புகள் வரவில்லையே என்று விரக்தியின் உச்ச்சதிற்கே சென்று விட்டார் அம்மணி.

இதனால், குடிக்கு அடிமையான இவர்சமீபத்தில் குடியைநிறுத்தி விட்டு பக்கத்துக்கு ஸ்டேட் இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்தார். ஆனால், இவர் கமிட்  ஆன ஒரு படத்தில் வேறு நடிகையை போட்டு விட்டு அம்மணியை கழட்டி விட்டு விட்டனர்.

இது இவருக்கு வெறுப்பை ஏற்படுத்தவே இப்போது பகலிலும் குடிக்க ஆரம்பித்து விட்டாராம். நிலைமையின் வீரியம் அறிந்த பெற்றோர்கள் நடிகைக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க போராடி வருகிறார்களாம்.

மேலும், அம்மணியின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் ரிலாக்ஸ் செய்ய அவரை வெளிநாடு சுற்றுலா செல்ல அழைத்துள்ளனர். ஆனால், முடியவே முடியாது என்று மறுத்து விட்ட அம்மணி மதுவின் பிடியில் சிக்கி தவிக்கிறாராம்.

இவரின் இந்த நிலை அறிந்த கோடம்பாக்கத்தினர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்திருக்க வேண்டிய பொண்ணு இப்படி ஆகிடுச்சே என உச் கொட்டி வருகிறார்களாம்.
Advertisement

Share it with your Friends