"நல்லாவே இல்ல.., நீங்க அப்படி இருப்பது தான் அழகு " - அஞ்சலி வெளியிட்ட புகைப்படம் புலம்பி தள்ளும் நெட்டிசன்கள்..!


தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவர் அஞ்சலி. போட்டோ என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் கற்றது தமிழ் என்ற தமிழ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 

முதல் படம் இவருக்கு சரியான வரவேற்பை கொடுக்கவில்லை. இதனை அடுத்து அங்காடி தெரு படத்தில் கதாநாயகியாக நடித்தார் அஞ்சலி. அங்காடி தெரு திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்றது. 

இதனை அடுத்து பல்வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் நடிகை அஞ்சலி. சினிமாவில் வளர்ச்சி ஒருபக்கம் இருந்தாலும் இவர் மீது பல்வேறு சர்ச்சைகளும் எழுந்தது. 

மேலும், பிரபல தமிழ் நடிகர் ஜெய் மற்றும் அஞ்சலி இருவரும் காதலிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரபூர்வமாக தெரியவில்லை. 

இந்நிலையில், கடந்த சில காலங்களாக பொசு பொசுவென படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆடி ரசிகர்களை கவர்ந்து வந்த அஞ்சலி தற்போது உடல் எடை குறைத்து ஒல்லிப்பிச்சானாக மாறிவிட்டார்.

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒல்லியான நடிகைகள் எந்த காலத்தில் பிடித்துள்ளது. டோலிவுட், பாலிவுட் என இந்தியாவையே கலக்கிய இலியானா தமிழ் சினிமாவில் ஒன்றும் பண்ண முடியவில்லை.

தமிழ் சினிமா ரசிகர்களை பொறுத்தவரை குண்டாகவும் இருக்க கூடாது, ஒல்லியாகவும் இருக்ககூடாது. இரண்டிற்கும் நடுவில் பொசு பொசுவென இருக்கும் நடிகைகள் மட்டுமே ஹீரோயினாக ஜொலிக்க முடியும். 

ஆனால், இது தெரியாமல்.. இப்ப பாரு எப்படி ஃபிட் ஆகுறேன்னு என கூறிக்கொண்டு உடல் எடை குறைகிறேன் பேர்வழி என ஏகத்துக்கும் உடல் எடை குறைத்து ஒல்லிப்பிச்சானாக மாறி விடுகிறார்கள். 

அந்த வகையில், ஃபிட் ஆகுறேன்னு கூறிவிட்டு எழும்பும் தோலுமாக வந்து நிற்கிறார் நடிகை அஞ்சலி. இப்போது அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரிடம் நேரடியாகவே கூற ஆரம்பித்து விட்டார்கள்.

நீங்கள் பொசு பொசுவென, வழைவு நெழிவுடன் இருப்பது தான் அழகு. இதெல்லாம், உங்களுக்கு செட் ஆகவே இல்லை என்று புலம்பி வருகிறார்கள்.ஃபிட்டா இருங்க.. அதுக்குன்னு இந்த அளவுக்கு வேணாம். உங்க Chubbiness தான் அழகு என்று கூறி வருகிறார்கள்."நல்லாவே இல்ல.., நீங்க அப்படி இருப்பது தான் அழகு " - அஞ்சலி வெளியிட்ட புகைப்படம் புலம்பி தள்ளும் நெட்டிசன்கள்..! "நல்லாவே இல்ல.., நீங்க அப்படி இருப்பது தான் அழகு " - அஞ்சலி வெளியிட்ட புகைப்படம் புலம்பி தள்ளும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on February 19, 2020 Rating: 5
Powered by Blogger.