காவல் துறையினரிடம் இருந்து அஜித்திற்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம் - வைரலாகும் வீடியோ


தமிழ் சினிமாவின் தனிக்காட்டு ராஜா தல அஜித். மற்ற நடிகர்களுக்கும் இவருக்கு நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. நடிப்பது என் வேலை. ரசிப்பதும், வெறுப்பதும் ரசிகர்களின் விருப்பம். அவ்வளவு தான். விளம்பரங்களில் நடிப்பது, அரசியல் கருத்துக்களை கூறுவது என எதிலும் தலையிடுவது கிடையாது. 

இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் தீபாவளி அன்று வெளிவரும் என தயாரிப்பாளர் போனி கபூர் அண்மையில் விருது விழா ஒன்றில் கூறினார். 

இந்நிலையில் அஜித் இப்படத்திற்கு முன்பு சிவா இயக்கத்தில் வெளிவந்த விஸ்வாசம் படத்தில் நடித்திருந்ததை நாம் அறிவோம். இப்படத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த பாட்டு என்றால் அது கண்டிப்பாக 'கண்ணான கண்ணே' பாடல் தான். 

தற்போது இப்பாடலை கேரளா காவல் துறை அதிகாரி ஒருவர் கிட்டாரில் வாசித்து அசத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளிவந்துள்ளது.  மேலும் இது காவல் துறையினரிடம் இருந்து அஜித்துக்கு கிடைத்த மிக பெரிய பெருமை என்று, இந்த விடியோவை தற்போது அஜித் ரசிகர்கள் டுவிட்டரில் வைரலாகி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ...

காவல் துறையினரிடம் இருந்து அஜித்திற்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம் - வைரலாகும் வீடியோ காவல் துறையினரிடம் இருந்து அஜித்திற்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம் - வைரலாகும் வீடியோ Reviewed by Tamizhakam on February 27, 2020 Rating: 5
Powered by Blogger.