கோடி ரூபாய் கொடுத்தாலும் அவருடன் நடிக்க மாட்டேன் - கடுப்பான நடிகை கேத்ரின் தெரேசா.! - யாரு அந்த நடிகர்..?


கேத்ரின் தெரசா பார்ட் டைமாக தமிழிலும், ஃபுல் டைமாக தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். 

மெட்ராஸ் திரைப்படத்தில் பக்கத்துக்கு ஏரியா பொண்ணு போல நடித்திருந்த அவர் பிறகு கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார், சமீபத்தில் நடித்த கலகலப்பு 2 திரைப்படத்திலும் அதீத கவர்ச்சி காட்டி சூட்டை கிளப்பி இருந்தார். 

கவர்ச்சியில் தாராளம் காட்டுவதால் இவருக்கு தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் அதிகம். ஒரு காலத்தில் அல்லு அர்ஜுன் போன்ற இளம் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த இவர் இப்போது பட வாய்ப்புகளை நிர்வகிக்க முடியாத அளவுக்கு பிஸியாக இருக்கிறார். 

கேத்ரின் மெட்ராஸ் திரைப்படத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார், இதனை தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில், தெலுங்கில் நடிகர் பாலய்யா (எ) பாலகிருஷ்ணா-வுடன் நடிக்க மறுத்து விட்டார் என்ற தகவல் வெளியானது. மேலும், பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க ஒரு கோடி கொடுத்த போதிலும் அவர் நடிக்க மறுத்து விட்டார் என்று கூறினார்கள்.


இந்நிலையில், ஒரு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரிடமே இதனை கேட்டு தெரிந்து கொள்ளலாம் என "பாலகிருஷ்ணாவுடன் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார்களாமே..?" என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதனால் கடுப்பான கேத்ரின் தெரேசா, " என்னை பார்த்தால் உங்களுக்கு எப்படி தெரிகிறது. என்னை பற்றி நீங்கள் என்ன நினைத்துக்கொண்டிருகிறீர்கள். நான் நடிக்கிறேனா இல்லையா..? என்று சம்பந்தப்பட்ட இயக்குனர் அல்லது தயாரிப்பாளர் கூறுவார். இது பற்றி என்னிடம் எதுவும் கேட்காதீர்கள்" என்று அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார்.

கோடி ரூபாய் கொடுத்தாலும் அவருடன் நடிக்க மாட்டேன் - கடுப்பான நடிகை கேத்ரின் தெரேசா.! - யாரு அந்த நடிகர்..? கோடி ரூபாய் கொடுத்தாலும் அவருடன் நடிக்க மாட்டேன் - கடுப்பான நடிகை கேத்ரின் தெரேசா.! - யாரு அந்த நடிகர்..? Reviewed by Tamizhakam on February 16, 2020 Rating: 5
Powered by Blogger.