ஏற்கனவே குண்டாக இருக்கும் நிலையில் இந்த பாட்டில் இப்போ தேவையா..? - "மதுர" பட நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!


தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான தம் படத்தில் அறிமுகமானவர் நடிகை ரக்ஷிதா. இதையடுத்து விஜய்க்கு ஜோடியாக மதுர படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இன்னொரு நடிகையாக தேஜஸ்ரீ நடித்திருந்தார். 

ஆரம்பத்திலேயே சிம்பு மற்றும் விஜய்யுடன் நடித்திருந்தாலும் ரக்ஷிதாவுக்கு படவாய்ப்புகள் எதிர்பார்த்தளவு கிடைக்கவில்லை. இதையடுத்து அரசியலில் குதித்த அவர் பாஜகவில் இணைந்து அரசியலில் ஈடுபட துவங்கினார். 

பின்னர், கன்னட இயக்குனர் பிரேமை திருமணம் செய்து கொண்ட இவருக்கு சூர்யா என்ற மகன் உள்ளார். அரசியல், குடும்ப வாழ்க்கை என செட்டிலாகி விட்டார் ரக்ஷிதா. இந்நிலையில் நடிகை ரக்ஷிதாவின் லேட்டட்ஸ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

உடல் எடை அதிகரித்து அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி போயுள்ளார் ரக்ஷிதா. தற்போது, ஏக் லவ் யா என்ற ஒரு படத்தை தயாரித்துள்ளார் அம்மணி. இந்த படத்தின் ப்ரோமோஷன் போஸ்டரில் கையில் பீர் பாட்டிலை வைத்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.


ஏற்கனவே, குண்டாக இருக்கும் நிலையில் கையில் பீர் பாட்டில் அவசியமா..? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.


Advertisement

Share it with your Friends