"திரௌபதி" - எகிறிய வசூல் இரண்டாம் நாள் - குடும்பம் குடும்பமாக சென்று கொண்டாடும் பெண்கள்..!


இயக்குனர் மோகன்.ஜி இயக்கத்தில் கூட்டு பண முதலீட்டில் தயாரிக்கப்பட்ட படம் "திரௌபதி". சமூகத்தில், பணக்காரர்கள் வீட்டை குறிவைத்து நடத்தப்படும் நாடக காதல் மோசடியையும் அதனால் பாதிக்கப்படும் பெண்களின் வாழ்க்கையில் இப்படம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. 

அரசு அலுவலகத்தில் நடக்கும் போலி பதிவு திருமணங்களையும், ஆணவக்கொலைகள் பின்னால் இருக்கும் உண்மையையும் இந்த படம் அம்பலப்படுத்தியுள்ளது. 

நடிகர் அஜித்தின் மைத்துனர் ரிச்சர்டு, நடிகை ஷீலா, நடிகர் கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடிக்க இப்படத்திற்கு முன்னணி நடிகர்களுக்கு இணையான மாஸான வரவேற்பு கிடைத்துள்ளது. 

பெண் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இந்த படத்தை பார்க்க பெண்கள் குடும்பம் குடும்பமாக "திரௌபதி" திரையரங்குகள் நோக்கி படையெடுத்து வருகிறார்கள். 

இந்நிலையில் இப்படம் தமிழ்நாட்டில் முதல் நாளில் ரூ 2.76 கோடி வசூல் செய்திருந்தது என தகவல்கள் வெளியாகி நிலையில்,நேற்று சனிக்கிழமை விடுமுறை நாள் இந்த படம் வசூல் எகிறியுள்ளது.

விடுமுறை தினமாக நேற்று சென்னையில் மட்டும் 12 லட்ச ரூபாய் வசூல் செய்துள்ள இந்த படம் உலகம் முழுதும் 1.5 கோடி ரூபாய்களை வசூல் செய்து சாதனை படைத்து வருகின்றது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் இன்னும் வசூல் அதிகரிக்கும் என கூறுகிறார்கள் பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரத்தினர்.

"திரௌபதி" - எகிறிய வசூல் இரண்டாம் நாள் - குடும்பம் குடும்பமாக சென்று கொண்டாடும் பெண்கள்..! "திரௌபதி" - எகிறிய வசூல் இரண்டாம் நாள்  - குடும்பம் குடும்பமாக சென்று கொண்டாடும் பெண்கள்..! Reviewed by Tamizhakam on February 29, 2020 Rating: 5
Powered by Blogger.