குட்டி ஸ்டோரி பாடல் இந்த பாடலின் காப்பியா..? - இணையத்தில் வைரலாகும் வீடியோ..!


பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம், கத்தி உள்ளிட்ட படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். 

மாஸ்டர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆன்ட்ரியா, சாந்தனு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

மாஸ்டர் படத்தின் ஒரு குட்டிக் கதை என்று தொடங்கும் முதல் பாடலை அனிருத் இசையில் விஜய் பாடியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. குட்டிக்கதை சிங்கிள் டிராக் காதலர் தினமான இன்று வெளியானது. 

வெளியான சில நிமிடங்கிளல் அதிக பார்வைகள் மற்றும் லைக்ஸ் பெற்று சாதனை படைத்தது. விஜய் ரசிகர்களும் #KuttiStory என்ற ஹேஸ்டேகை இந்திய அளவில் டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த பாடல் "ராஜகாளியம்மன்" படத்தில் இடம் பெற்ற "சந்தன மல்லிகையில்" பாடலின் ட்யூனில் இருப்பதாக ரசிகர்கள் ஒரு வீடியோவை வெளியிட்டு கலாய்த்து வருகிறார்கள்.
Advertisement

Share it with your Friends