"மாஸ்டர்" படத்தில் விஜய் இப்படிப்பட்டவரா..? - அப்போ, படம் முழுதும் வார்னிங் மெசேஜ் தான்..!


மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால், படம் முழுதும் வார்னிங் மெசேஜ் போடும் அளவுக்கு குணாதிசயம் கொண்டவராக நடிக்கிறார் என்று தகவல் பரவி வந்தது.

இது குறித்து படக்குழு எந்தஅறிவிப்பும் வெளியிட வில்லை. இந்நிலையில், இன்று வெளியான முதல் சிங்கிள் ட்ராக் வெளியீடு குறித்த போஸ்டர் அதனை உறுதி செய்துள்ளது.

ஆம், நடிகர் விஜய் மாஸ்டர் படத்தில் பேராசியராக ஹீரோயிசம் செய்தாலும் எப்போதும் கையில் பாட்டிலும் கையுமாக மது குடித்துக்கொண்டே இருக்கும் கதாபாத்திரமாம். 

இதனை சிங்கிள் ட்ராக் ரிலீஸ் போஸ்டர் உறுதி செய்துள்ளது. கையில், ஜாக்டேனியல்ஸ் ஹிப் ப்ளாஸ்க் (Jack Daniels Hip Flask) மது பாட்டிலை வைத்துக்கொண்டு காதில் ஹெட்செட் போட்டபடி சாய்ந்து படுத்துள்ளார்.

எனில், படம் முழுக்க "குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது" என்ற வார்னிங் மெசேஜ் இடம் பெறப்போவது உறுதி.


Advertisement

Share it with your Friends