விஜய் ரசிகர்கள் குறித்து "மேயாத மான்" பட இயக்குனர் வெளியிட்ட மாஸ் வீடியோ - மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்..!


நடிகர் விஜய் மற்றும் அவருக்கு இருக்கும் வெறித்தனமான ரசிகர்கள் பற்றி சொல்லி தெரியவேண்டியதில்லை. ஒருவேளை தமிழ்நாட்டில் விஜய் படங்களின் ஷூட்டிங் நடந்தால் அங்கே கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கூட்டம் விஜய்யை பார்க்க கூடும். இது வழக்கமான ஒன்று தான். 

அந்த வகையில், தற்போது "மாஸ்டர்" பட ஷூட்டிங்கிலும் அது தான் நடந்துவருகிறது. நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் நடந்து வரும் படப்பிடிப்பு பகுதிக்கு அருகில் அவரை பார்ப்பதற்காக பெரிய கூட்டம் கூடி வருகின்றது. 

ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு நிற்கும் அந்த விடியோவை பார்த்த பிரபல இயக்குனர் ரத்ன குமார் ட்விட்டரில் பிரமிப்புடன் பதிவிட்டுள்ளார். 

இந்த வீடியோவை வெளியிட்டு அழகிய தமிழ் மகன் படத்தின் இடம் பெற்ற உன்னால் முடியும் தோழா படாலில் இருந்தே சில வரிகளை கேப்ஷனாக வைத்துள்ளார் "எந்த வோ்வைக்கும் வெற்றிகள் வோ்வைக்குமே ! உன்னை உள்ளத்தில் ஊா் வைக்குமே❤️" என அவர் ட்விட் செய்துள்ளார்.
Advertisement

Share it with your Friends