"உசுரு மேல அவ்ளோ பயமா..?" - நிவேதா தாமஸின் புகைப்படத்தை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்..!


குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடிக்க ஆரம்பித்த இவர், 2003ம் ஆண்டு உத்தரா என்ற திரைப்படத்தில் அறிமுக மானார்.

அதன் பிறகு 2008ம் ஆண்டு “வெறுத்தே ஒரு பார்யா” திரைப்படத்தில் நடித்தற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது வென்றார். அதே ஆண்டில் தமிழ்த் திரைப்படத்தில் விஜய்யின் தங்கையாக “குருவி” படத்தில் அறிமுகமானார்.

அதன் பின்பு தமிழில் “போராளி” , “ஜில்லா ” , “பாபநாசம் ” போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.தற்போது இவர் தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். 

தற்போது இயக்குனர் கே.வி குகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “118” . இப்படம் திரில்லர் படமாக உருவாகி உள்ளது. இப்படத்தில் நடிகை நிவேதா தாமஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சமீபத்தில், சீனாவில் உருவான கோவிட்-19 (கொரோனா) என்றவைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட பல இறந்து போனார்கள். இதனால், உலகம் முழுதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

அதிலும், சீனாவின் அண்டை நாடாக இருக்கும் இந்தியாவில் இந்த நோய் பரவி விடாமல் இருக்க இந்திய அரசு துரிதமாக நடவடிக்கை எடுத்து மக்களை காப்பாற்றி வருகின்றது. இதனால், பல நாடுகளில் இருந்து பிரதமர் மோடிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.


இந்நிலையில், நடிகை நிவேதா தாமஸ் முகத்திற்கு மாஸ்க் அணிந்தபடி ஹைதராபாத் விமான நிலையத்திற்கு வந்திருந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து.. உசுரு மேல அவ்ளோ பயமா..? என அவரை கலாய்த்து வருகிறார்கள்.

"உசுரு மேல அவ்ளோ பயமா..?" - நிவேதா தாமஸின் புகைப்படத்தை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்..! "உசுரு மேல அவ்ளோ பயமா..?" - நிவேதா தாமஸின் புகைப்படத்தை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 24, 2020 Rating: 5
Powered by Blogger.