காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள முடிவு எடுத்த முன்னணி நடிகை - எந்த மாதிரி வேணாலும் நடிக்க ரெடியாம்..!


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை. ஒரு காலத்தில் நான் போறேன்.. சினிமாவை விட்டே போறேன்.. எனக்கு வேணாம்.. நான் போறேன் என்று சிம்புவின் மன்மதன் படத்தில் வரும் மொட்ட மதன் போல அழுது கதறினார்.

ஆனால், யாரால் சினிமாவை விட்டு போகிறேன் என்று சொன்னாரோ, அவர் இவரை விட்டு போய்விட்டார். இதனால், மீண்டும் சினிமாவுக்கு வந்துவிட்டார் அம்மணி. வந்ததும் இயக்குனர் ஒருவருடன் மூன்றவதாக காதலில் விழுந்தார்.

இவர் காதலித்த ஒருவர் இன்னும் கல்யாணம் ஆகாமல் ஒண்டிக்கட்டையாக சுற்றி வருகிறார், என்கிட்டே பணமும் இல்ல ஒன்னும் இல்ல, காருக்கு பெட்ரோல் போட கூட அம்மாவை தான் நம்பியிருக்கேன் என்று மீடியா முன்பு கதறும் நிலைக்கு தள்ளப்பட்டார். 

மற்றொருவர், இருக்குறதை விட்டுட்டு பறக்குறதை புடிக்கிறேன் என்று கட்டிய  மனைவியை விவாகரத்து செய்து விட்டு கால் போன போக்கில் காலம் கடத்தி வருகிறார்.  இப்போது, சில பண பிரச்சனைகள் காரணமாக தன்னுடைய ஒரு வீட்டை விற்க விலை பேசி வருகிறார்.

ஆனால், அம்மணி காட்டில்அடைமழை தான். ஹீரோயின் செண்ட்ரிக் படங்கள், முன்னணி ஹீரோக்களின் படங்கள் என கோடி கோடியாக கல்லா கட்டி வருகிறார். சமீப காலமாக, எனக்கு வெயிட்டான கதாபாத்திரம் இருந்தால் தான் நடிப்பேன் என நான் தலைகிழாய் தான் குதிப்பேன் என்பது போல கவுண்டமணி கணக்காக கதையழந்து வந்தார்.

ஆனால்,இப்போது வெயிட்டான சம்பளம் கொடுத்தால் போதும் படத்தில் ஒரு சில காட்சிகள் தான் என்றாலும் பராவயில்லை. இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட் என்றாலும் சரி சம்பளம் வெயிட்டாக இருந்தால் போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.

அந்த மாதிரி, இந்த மாதிரி என்று என்ற கண்டிஷனும் இல்லை. எந்தமாதிரி வேண்டுமானாலும் நடிக்க ரெடி என்கிறார்.

காரணம், விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ள அம்மணி இனிமேல் பட வாய்ப்பு வருமோ..? வராதோ..? தெரியாது. அதனால், முடிந்த வரை படங்களில் கமிட் ஆகி பணத்தை சேமிக்கிற வழியை பார்ப்போம் என முடிவு செய்து காய் நகர்த்த தொடங்கியுள்ளார். இதனை அறிந்த தயாரிப்பாளர்கள், அவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்க முன்வந்து தங்களுடைய படங்களில் கமிட் செய்து வருகிறார்கள்.
Advertisement

Share it with your Friends