மதம் மாறிய அமலாபால் - இது தான் காரணமா..? - வைரலாகும் புகைப்படம்..!


நடிகை அமலா பால் ஒரு கிருத்துவ குடும்பத்தில் பிறந்தவர். இவரதுதந்தையின் பெயர் பால் வர்கீஸ், அம்மாவின் பெயர் எனிஸ் பால் என்பதாகும். இவர் இயக்குனர் விஜய்யை காதல் திருமணம் செய்து கொண்டார்.

இந்து முறைப்படியே இவருக்கு திருமணம் நடைபெற்றது. இருந்தாலும், திருமணம் நடந்த அதே நாள் கிருத்துவ முறைப்படியும் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு மதப்பற்று கொண்டிருந்த அமலா பால் தற்போது முழுமையாக இந்து மதத்திற்கு மாறியுள்ளார்.

சமீப காலமாக, மன அமைதிக்காக யோகா போன்றவற்றை பின்பற்றி வந்த இவர் தற்போது விரதம் இருந்து கடவுளை வழிபட துவங்கியுள்ளார். சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வரும் சில புகைப்படங்கள் அவர் மதம் மாறிவிட்டார் என செய்திகள் பரவ காரணமாகியுள்ளது.

அவர் ஏகாதசிக்கு விரதம் இருப்பதாகவும், அப்படி ஏகாதசி விரதம் இருப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை பற்றியும் விளக்கம் கூறியிருப்பது பலருக்கும் ஆச்சர்யம் கொடுத்துள்ளது.

சமீபத்தில், நான் ஒருவரை காதலிப்பதாவதும் என்னுடைய இரண்டாவது திருமணம் குறித்து விரைவில் அறிவிப்பை வெளியிடுவேன் என கூறியிருந்தார் அமலா பால். ஒருவேளை, காதலனுக்காக தன்னை மதம் மாற்றிக்கொண்டாரா அமலா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மதம் மாறிய அமலாபால் - இது தான் காரணமா..? - வைரலாகும் புகைப்படம்..! மதம் மாறிய அமலாபால் - இது தான் காரணமா..? - வைரலாகும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on February 20, 2020 Rating: 5
Powered by Blogger.