படப்பிடிப்பு தளத்தில் வேன் மீது ஏறி ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்த தளபதி - வெறித்தனமாக கொண்டாடும் விஜய் ரசிகர்கள்.!


முதன் முறையாக நடிகர் விஜய் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி இணைந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படம் மாஸ்டர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நெய்வேலியில் உள்ள பிரபல சோரங்கத்தில் நடந்து வருகிறது. 

மேலும் கடந்த இரண்டு நாட்களாக விஜய் அவர்களை பார்ப்பதற்காக பெரிதாவில் ரசிகர்கள் திரண்டிருந்தனர். இந்நிலையில் மூன்றாம் நாளான இன்றும் கொஞ்சோம் கூட குறையாத அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் வந்துள்ளது. 

மேலும் அந்த இடத்தில ரசிகர்கள் தளபதி தளபதி என கோஷமிட்டு கொண்டடி வந்தனர். 

இந்நிலையில், தன்னை காண வந்திருந்த ரசிகர்களை ஏமாற்றி விடமால் இருக்க படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியே வந்துஅங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு வேன் மீது ஏறி நின்று ரசிகர்களை நோக்கி கையை அசைத்து அவர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார் நடிகர் விஜய்.

அந்த வீடியோ இப்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.
Advertisement

Share it with your Friends