Haters-க்கு " குட்டி ஸ்டோரி" பாடலில் பதிலடி கொடுத்துள்ள நடிகர் விஜய் - இதை நோட் பண்ணீங்களா..?


மாஸ்டர் படத்திற்காக நடிகர் விஜய் பாடியுள்ள 'ஒரு குட்டி கதை' பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அது இணையத்தில் மிகவேகமாக வைரலாகி வருகிறது. 

அதில் விஜய் தன் ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுக்கும் விதத்தில் தான் வரிகள் இருக்கிறது. மேலும் தனக்கு எதிராக பேசுபவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதத்திலும் உள்ளது அது. 

ஒரு காட்சியில் 'Dont be the person spreading Hatred' என்ற பாடல் வரிகள் வரும் போதும் செய்தி தாளில்  ஒரு அரசியல் கட்சி கூட்டத்தை குறிபிடுவது போலவும், அதில் பேசுபவரை பிசாசு போன்ற கொம்பு வைத்துள்ளவர் போலவும் காட்டியுள்ளனர்.

அதிலும், குறிப்பாக பேசுபவர் மற்றும் அதனை கேட்கும் தொண்டர்கள் ஆகியோரை "காவி" நிறத்தில் ஹைலைட் செய்து காட்டியுள்ளனர். இதனால், விஜய்க்கு எதிராக தொடர்ந்து சர்ச்சைகள் ஏற்படுத்திவரும் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு தான் விஜய் பதிலடி கொடுத்துள்ளார் என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கீச்சுகளை பறக்க விட்டு வருகிறார்கள். 


Haters-க்கு " குட்டி ஸ்டோரி" பாடலில் பதிலடி கொடுத்துள்ள நடிகர் விஜய் - இதை நோட் பண்ணீங்களா..? Haters-க்கு " குட்டி ஸ்டோரி" பாடலில் பதிலடி கொடுத்துள்ள நடிகர் விஜய் - இதை நோட் பண்ணீங்களா..? Reviewed by Tamizhakam on February 14, 2020 Rating: 5
Powered by Blogger.