"என்ன நண்பா ரெடியா..? " - மாஸ்டர் Second Single குறித்து வெளியான தகவல் - கொண்டாடத்தை ஆரம்பித்த ரசிகர்கள்..!


விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் முதல் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி ஹிட் ஆனது. இந்நிலையில் இந்த பாடலை தெலுங்கில் பாட முன்னணி ஹீரோ ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது என தகவல் வெளியாகியுள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் - விஜய் சேதுபதி நடிக்கும் படம் மாஸ்டர். இந்த படம் தமிழில் மட்டுமில்லாது, தெலுங்கிலும் டப்பிங் முறையில் உருவாகிறது. 

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு குட்டி கதை பாடல் விஜய் குரலில் வெளியாகி பட்டி தொட்டியெல்லாம் ஹிட் ஆகியது. அந்த பாடலை தெலுங்கில் விஜய்யே பாடுவாரா இல்லை வேறு யாரும் பாடுவார்களா என்ற பேச்சு ரசிகர்களிடையே இருந்து வருகிறது. 

இந்த நிலையில்தான் இப்படி ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஒரு குட்டி கதை பாடலை தெலுங்கில் விஜய் பாடவில்லையாம். தெலுங்கின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான ஜூனியர் என்டிஆர் இந்த பாடலை பாடவிருப்பதாக பேச்சு எழுந்துள்ளது. 

அவரிடம் இந்த பாடலை பாட, அனிருத் தரப்பிலிருந்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அவரும் இந்த வாய்ப்புக்கு ஓகே சொல்லிவிட்டதாகவும், விரைவில் அவர் குரலில் குட்டி கதையை கேட்கலாம் என்கிறார்கள். 

இந்நிலையில், இந்த படத்தில் இடம் பெற்றுள்ள இன்னொரு பாடல் ரிலீஸ் குறித்து இன்று அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. குட்டி ஸ்டோரி பாடலுக்கு பின் இரண்டாவது ட்ராக் எப்போது ரிலீஸ் ஆகும் என கேட்டு வந்த விஜய் ரசிகர்களுக்கு இந்த செய்து கொண்டாட்டமாக அமைந்துள்ளது. 

சமூக வலைதளங்களில் தனிக்காட்டு ராஜாவாக சுற்றி வரும் விஜய் ரசிகர்கள் இரண்டாவது சிங்கிள் ட்ராக் குறித்து வெளியான தகவலை தொடர்ந்து, #MasterSecondSingle என்ற டேக்-கை ட்ரெண்ட் செய்து அசத்தி வருகிறார்கள் ரசிகர்கள்."என்ன நண்பா ரெடியா..? " - மாஸ்டர் Second Single குறித்து வெளியான தகவல் - கொண்டாடத்தை ஆரம்பித்த ரசிகர்கள்..! "என்ன நண்பா ரெடியா..? " - மாஸ்டர் Second Single குறித்து வெளியான தகவல் - கொண்டாடத்தை ஆரம்பித்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 22, 2020 Rating: 5
Powered by Blogger.