ப்ப்பா..! SK14 படத்தின் தலைப்பு வெளியானது - தமிழ் சினிமாவில் முதல் முறையாக - மாஸ் அப்டேட்..!


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வருவார் என்ற நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வருபவர் இளம் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடந்த வருடம் மிஸ்டர் லோக்கல், நம்ம வீட்டு பிள்ளை, ஹீரோ ஆகிய படங்கள் வந்தது. 

இந்நிலையில், ஹீரோ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம், இப்படத்தை ரவிக்குமார் இயக்கி வருகின்றார். 

இடையில், பணப்பிரச்சனை காரணமாக பாதியில் நின்ற இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் தான் இசை, அவரே இப்படத்தின் டைட்டிலை இன்று தன் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். 

இப்படத்தின் டைட்டில் "அயலான்" என்று வைத்துள்ளனர், அயலான் என்றால் தமிழில் "ஏலியன்" என்று பொருளாகும். இதனால், வேற்று கிரக வாசிகள் சம்மந்தப்பட்ட கதையாக இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

மேலும், டைட்டில் லோகோ-வில் ஏலியன் முகம் ஒன்றும் இடம் பெற்றுள்ளது இதனை உறுதிபடுத்தும் விதமாக உள்ளது. இதுவரை, தமிழ் சினிமாவில்வேற்று கிரக வாசிகள் குறித்த படங்கள் வெளியானது இல்லை என்பது இது தான் முதல் முறை என்பதும் குறிப்பிடதக்கது.


இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ப்ப்பா..! SK14 படத்தின் தலைப்பு வெளியானது - தமிழ் சினிமாவில் முதல் முறையாக - மாஸ் அப்டேட்..! ப்ப்பா..! SK14 படத்தின் தலைப்பு வெளியானது - தமிழ் சினிமாவில் முதல் முறையாக - மாஸ் அப்டேட்..! Reviewed by Tamizhakam on February 03, 2020 Rating: 5
Powered by Blogger.