மேன் vs வைல்ட் : ரஜினியை தொடர்ந்து மேலும் கலந்து கொள்ளும் இரண்டு பிரபலங்கள்..! - யார் யார் தெரியுமா..?


உலக மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி மேன் vs வைல்ட். முற்றிலும் உலக வாழ்கையில் இருந்து தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு காட்டுக்குள் விலங்குகள் மற்றும் ஆபத்தான இடங்களை தாண்டி செல்வது என்ற நிகழ்ச்சி என்பதால் இந்த நிகழ்ச்சிக்கு பலரும் அடிமை.

இந்த நிகழ்ச்சியில் அவ்வப்போது பிரபலங்களும் கலந்து கொள்வார்கள். அமெரிக்க அதிகபாராக இருந்த போது ஒபாமா இதில் கலந்து கொண்டார். சமீபத்தில், நம்முடைய பாரத பிரதமர் மோடி அவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காட்டு வாழ்க்கையின் அனுபவத்தை பெற்றார்.

தற்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பினார்.இந்நிலையில், பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே மற்றும் கிரிக்கெட் வீரர் வீரட் கோலி ஆகியோர் தனித்தனியே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement

Share it with your Friends