"திரௌபதி" vs "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்" - எந்த படம் அதிக வசூல்..? - முதல் நாள் வசூல் விபரம்..!


தமிழ் சினிமாக்களத்தில் நேற்று வெளியான இரண்டு படங்களில் ஒன்று கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், இன்னொன்று திரௌபதி. இரண்டுமே வெவ்வேறு விசயத்தை அம்பலப்படுத்தியுள்ளன. 

"திரௌபதி" படத்திற்கு டிரைலர் வெளியான போதிலிருந்தே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. சர்ச்சைகளுக்கிடையே படம் வெளியாகி நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றுள்ளது. 

இது நாடக காதல் மற்றும் போலி பதிவு திருமணங்களை எதிர்க்கும் விதமாகவும், ஆணவ கொலைகளுக்கு பின்னணியில் உள்ள உண்மைகளையும் வெளிக்கொனரும் படி உள்ளது . அதே போல கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் இக்காலத்தில் நவீன் முறையில் காதல் மோசடிகளையும், பணமோசடிகளையும் தோலுரித்துள்ளது. 

இந்நிலையில், முன்னணி நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும்கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் 13 லட்சம் வசூலித்துள்ள நிலையில் வெறும் 50 லட்சம் பொருட்செலவில் எடுக்கபட்ட "திரௌபதி" திரைப்படமும் 13 லட்சம் வசூலித்து முதல் நாள் வசூலை சமன் செய்து சாதனை படைத்துள்ளது.

"திரௌபதி" vs "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்" - எந்த படம் அதிக வசூல்..? - முதல் நாள் வசூல் விபரம்..! "திரௌபதி" vs "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்" -  எந்த படம் அதிக வசூல்..? - முதல் நாள் வசூல் விபரம்..! Reviewed by Tamizhakam on February 28, 2020 Rating: 5
Powered by Blogger.