"துப்பறிவாளன் 2" படத்திலிருந்து மிஸ்கின் தூக்கி வீசப்பட்டதற்கு இது தான் காரணமாம்..!


நடிகர் விஷால் மிஸ்கின் கூட்டணியில் வெளியான் துப்பறிவாளன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் முடிந்து விட்ட நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன் இயக்குனர் மிஸ்கின் படத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகின.

இதனை, இயக்குனர் மிஸ்கினும் ஒப்புக்கொண்டார். விஷாலும், நான் துப்பறிவாளன் 2 படத்திற்கு பின்பு ஒரு படத்தை இயக்க முடிவு செய்திருந்தேன்.  ஆனால், துப்பறிவாளன் 2 படத்தையே இயக்குவேன் என எதிர்பார்க்கவில்லை என எதிர்பார்க்க வில்லை என்று கூறியிருந்தார். 

இதற்கு காரணம், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பு விஷாலிடம் சில கண்டிஷன்களை மிஷ்கின் விஷாலிடம் வைத்ததே இந்த படத்தில் இருந்து மிஷ்கின் தூக்கி வீசப்பட காரணமாக மாறியுள்ளது. அதில் முக்கியமானது, ரூ. 5 கோடி சம்பளம் தானாம்.

மேலும், படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை மிஷ்கின் கேட்டதாகவும், இதில் தயாரிப்பாளர் தலையிட கூடாது எனவும் மிஷ்கின் கூறியுள்ளார். இதனால், கடுப்பான நடிகர் விஷால், இயக்குநர் மிஷ்கினை படத்திலிருந்து நீக்கியுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. விரைவில் இது குறித்து, நடிகர் விஷால் விளக்கம் கொடுப்பார் என கூறுகிறார்கள்.

--Advertisement--
Share it with your Friends