மாஸ்டர் 2nd சிங்கிள் - கெபா ஜெரோமியாவால் எகிறிய எதிர்பார்ப்பு


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள "மாஸ்டர்" படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவைந்துள்ள நிலையில் போஸ்டர் ப்ரொடக்ஷன் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. 

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக்காக வெளியான "குட்டி ஸ்டோரி" பாடல், விஜய் ரசிகர்களைத் தாண்டி பலரையும் ரசிக்க வைத்திருக்கிறது. இந்நிலையில், இன்னொரு பாடலையும் ரிலீஸ் செய்ய தயாராகிக் கொண்டிருக்கிறது படக்குழு. இந்தத் தகவலை, பிரபல கிட்டாரிஸ்டான கெபா ஜெரேமியா வெளியிட்டிருக்கிறார். 

இவர், மாஸ்டர் படத்தின் முதல் பாடலிலும் பணிபுரிந்திருந்தார். அனிருத்துடன் இசையமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் படத்தைப் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் கெபா ஜெரேமியா. 

மேலும், அனிருத்துடன் ஒரு சூப்பர் கூல் டிராக்கில் பணிபுரிகிறேன் என்று பதிவு செய்ததுடன், மாஸ்டர் செகண்ட் சிங்கிள் என்ற வார்த்தையையும் சேர்த்து பகிர்ந்திருக்கிறார். 

இதனால், மாஸ்டர் படத்துக்காக இன்னொரு பாடல் விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

மாஸ்டர் 2nd சிங்கிள் - கெபா ஜெரோமியாவால் எகிறிய எதிர்பார்ப்பு மாஸ்டர் 2nd சிங்கிள் - கெபா ஜெரோமியாவால் எகிறிய எதிர்பார்ப்பு Reviewed by Tamizhakam on March 03, 2020 Rating: 5
Powered by Blogger.