தளபதி 65 படத்துக்கு இந்த தலைப்பை வைங்க..! - விஜய் ரசிகர்கள் ஆர்வம்..!


விஜய்யின் 64-வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள இப்படத்தில் விஜய் சேதுபது வில்லனாக நடித்துள்ளார். 

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மாஸ்டர் படம் அடுத்த மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனிடையே, விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. 

முருகதாஸ், சுதா கொங்காரா, லோகேஷ் கனகராஜ், மகிழ் திருமேனி, ஷங்கர், அஜய் ஞானமுத்து ஆகியோரது பெயர்கள் அடிபட்டது.இந்நிலையில், தளபதி 65 திரைப்படம் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகவுள்ளது என்ற தகவல் கிட்ட தட்டஉறுதியாகியுள்ளது.

வழக்கமாக தன்னுடைய புதிய படத்தின் ரிலீசுக்கு முன்பே அடுத்த படத்தை அறிவிக்கும் விஜய் இந்த முறை இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாட்டில் அசாதாரண நிலை நிலவி வருகின்றது.

இந்நிலையில், புது படம் குறித்த அறிவிப்பு வெளியிட்டால் அவ்வளவு சிறப்பாக இருக்காது என்பதால் விஜய் தரப்பு அமைதி காப்பதாக தெரிகின்றது. இந்நிலையில், துப்பாக்கி படத்தில் மீண்டும் முருகதாசுடன் விஜய் இணைவது பலதரப்பட்ட ரசிகர்களுக்கு பிடிக்கவில்லி என்பதை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகின்றது.

விஜய் ரசிகர்கள் கூட, முருகதாசின் சமீபத்திய படங்களான அகிரா, ஸ்பைடர், சர்கார், தர்பார் போன்ற படங்களை சுட்டிக்காட்டி இந்த படங்களில் சொதப்பலாக இருந்த தவறுகளை உணர்ந்து தளபதி 65 படத்தை உருவாக்க முயற்சி செய்யுங்கள் என்று முருகதாசிற்கு அட்வைஸ் செய்து வருகிறார்கள்.

இந்த படத்திற்கு "சோல்ஜர்" என்ற தலைப்பை வைக்க சில விஜய் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். படத்தை பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வராத நிலையில் படத்திற்கு தலைப்பு வைக்கும் அளவுக்கு சென்று விட்டனர் ரசிகர்கள்.

--Advertisement--
Share it with your Friends