புருஷனாக இருந்தாலும் பொது இடத்தில் இப்படி பண்ணலாமா..? - என்னம்மா இப்படி பண்றீங்களேமா..?


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஸ்ரேயா தனது மார்கெட் குறைந்ததால் தன்னுடைய காதலன் ஆண்ட்ரே கோஷ்சீவை (Andrei Koscheev) ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். 

இந்த தகவல் இணையத்தில் கசிந்ததை தொடர்ந்து, தான் திருமணம் செய்து கொண்டதை ஒப்புக்கொண்டார் அம்மணி. தமிழில் 'சிவாஜி', 'அழகிய தமிழ் மகன்', 'கந்தசாமி' உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை ஸ்ரேயா, தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழிப்படங்களில் நடித்துள்ளார். 

திருமணத்திற்கு பிறகு கொஞ்ச காலம் சினிமாவுக்கு பிரேக் கொடுத்திருந்து, தற்போது மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார். தமிழில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள நரகாசுரன் மற்றும் ஹிந்தியில் இவர் நடித்துள்ள தட்கா என இரண்டு படங்கள் ரிலீசுக்கு தயாராகி விட்ட பிறகும் பல்வேறு காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் பெட்டியில் தூங்குகின்றது.

தற்போது விமலுக்கு ஜோடியாக சண்டைக்காரி என்ற படத்தில் நடித்து வரும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார். அந்த வகையில், தற்போது தன்னுடைய கணவருக்கு பொது இடத்தில் உதட்டோடு உதடு ஒட்டி லிப்-லாக் முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள். உங்கள் புருஷனாக இருந்தாலும் பொது இடத்தில் இப்படியா..? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

--Advertisement--
Share it with your Friends