என்ன தீபிகா இதெல்லாம்..! - அந்த இடத்துல கூட இப்படியா..? - வைரலாகும் வீடியோ..!


"ராஸ்லீலா" என்ற படத்தில் முதல் முறையாக ஜோடி சேர்ந்த தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் இடையே கெமிஸ்ட்ரி பற்றிக் கொண்டது. நிஜத்தில் கெமிஸ்ட்ரி வேலை செய்ததால் திரையிலும் இந்த காதல் ஜோடியின் நடிப்பு சிறப்பான வரவேற்பை பெற்றது. 

வழக்கம் போல என்னதான் பாலிவுட் வட்டாரங்களில் கிசு, கிசு எழுந்தாலும், 6 ஆண்டுகள் காதலில் சின்சியராக இருந்த ரன்வீர் - தீபிகா திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். 

கடந்த 2018-ம் ஆண்டு இத்தாலியிலுள்ள கோமோ ஏரியில் பாலிவுட்டின் க்யூட் ஜோடியான தீபிகா படுகோனே - ரன்வீர் சிங்கிற்கு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் கூட தம்பதி இருவரும் பாலிவுட்டில் பிசியாக வலம் வந்தனர். 

தற்போது, ரன்வீர் சிங் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் உலக கோப்பையை வென்ற வரலாற்று படமான "83" படத்தில் நடித்து வருகிறார். இதில், சிறு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் தீபிகா படுகோனே. 

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் கவனமாக இருக்கும் தீபிகா படுகோனே மற்றும் ஷாருக்கான் நடிப்பில் உருவான சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் வரும் லுங்கி டான்ஸ் பாடல் மிகவும் பிரபலமான ஒன்று. 

இந்நிலையில், ஜிம்மில், ரோப் டிரெய்னிங் செய்து வரும் தீபிகா படுகோனே, அந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ஜிம்மில் கூட லுங்கி டான்ஸா என்று கேட்டு வருகிறார்கள்.

என்ன தீபிகா இதெல்லாம்..! - அந்த இடத்துல கூட இப்படியா..? - வைரலாகும் வீடியோ..! என்ன தீபிகா இதெல்லாம்..! - அந்த இடத்துல கூட இப்படியா..? - வைரலாகும் வீடியோ..! Reviewed by Tamizhakam on March 01, 2020 Rating: 5
Powered by Blogger.