தன்னுடைய கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து மோசமான கமென்ட் அடித்த நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த நடிகை..!


தென் இந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங் அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அவற்றுக்கு விமர்சனங்களும் எழுகின்றன. 

சிலர் ஆபாசமாக திட்டி கருத்து பதிவிட்டனர். தெலுங்கு சினிமாவில் கொடி கட்டி பறக்கும் நடிகைகளில் ஒருவர் ரகுல் ப்ரீத் சிங், இவர் தற்போது தமிழிலும் முன்னணி ஹீரோக்களின் படங்களில் கமிட் ஆகும் ஹாட் நடிகையாக வலம் வர தொடங்கியுள்ளார். 

நடிகர்கள் கார்த்தி மற்றும் சூர்யாவை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் அடிக்கடி கவர்ச்சியான போட்டோக்களை வெளியிடுவதும் வழக்கம். 

அந்த வகையில், சமீபத்தில் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்ட ரசிகர்களின் சூட்டை கிளப்பினார் அம்மணி. இதனை பார்த்த நெட்டிசன் ஒருவர் மிகவும் மோசமான கமெண்டை பதிவு செய்துள்ளார். 

இதனால் கடுப்பான ரகுல் ப்ரீத் சிங். இது குறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில் நடிகைகள் என்றால் கேவலாக பார்க்கிறார்கள், பெண்களை போதை பொருட்களாக பார்க்கிறார்கள். 

நடிகை தானே என்ன செய்து விடுவார் என நினைக்கின்றனர். சிலர் கவர்ச்சியான போட்டோக்களுக்கு ஆபாசமாக கருத்துகளை பதிவிடுகின்றனர். முகத்தை காட்ட தைரியமில்லாத கோழைகள் தான் இப்படி செய்வார்கள். பேக் ID-கள் உருவாகாதவாறு செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

தன்னுடைய கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து மோசமான கமென்ட் அடித்த நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த நடிகை..! தன்னுடைய கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து மோசமான கமென்ட் அடித்த நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த நடிகை..! Reviewed by Tamizhakam on March 29, 2020 Rating: 5
Powered by Blogger.