முன்னணி நடிகரின் மகனுன் டேட்டிங் சென்ற யாஷிகா ஆனந்த்..? - வைரலாகும் புகைப்படங்கள்..!


நடிகை யாஷிகா ஆனந்த் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதற்கு முன்பே துருவங்கள் பதினாறு, பாடம், இருட்டறையில் முரட்டு குத்து உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். 

ஆனாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிதான் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்தார் யாஷிகா ஆனந்த்.

ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் இல்லை. கிடைத்த வாய்ப்புகளும் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி இல்லை. எல்லை மீறி வருகிறது.

இதனால் தொடர்ந்து கவர்ச்சி போட்டோ ஷுட்டுக்களை நடத்தி அந்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்திலும் வெளியிட்டு வருகிறார் யாஷிகா ஆனந்த். போட்டோக்களில் கவர்ச்சி எல்லை மீறி வருகிறது.இது இவருக்கு எந்த மாதிரியான பட வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

ஆனால்,முன்னணி நடிகர்களுக்கு இவர் ஜோடியாவது கஷ்டம் தான் என்கிறார்கள். காரணம், இவர் மீது உள்ள முரட்டு குத்து இமேஜ் தான். இந்நிலையில், குணசித்திர வேடங்களில் நடித்து வரும் முன்னணி நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவுடன் ஊர் சுற்றி திரியும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.


இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. உமாபதி ராமையா   "அதாகப்பட்டது மகாஜனங்களே", "திருமணம்" என இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.--Advertisement--
Share it with your Friends