அவரு எதுக்கு விக் போடுறாரு..? - ரசிகரின் கேள்வியால் திக்கி திணறி மழுப்பல் பதில் கொடுத்த பிரபல நடிகர்..!


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்துள்ள மாஸ்டர் படத்தை வரும் ஏப்ரல் மாதம் 9ம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். 

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருப்பதால் திரையரங்குகள் மார்ச் 31ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன. வைரஸ் அச்சத்தால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். 

பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளன. இந்நிலையில் மாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவுக்கு நெருக்கமான ஒருவர் மாஸ்டர் ரிலீஸ் தேதியில் எந்த மாற்றமும் இல்லை. இப்போதைக்கு, ஏப்ரல் 9-ம் தேதி படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றது என கூறினார்.

இது ஒருபுறம் இருக்க நடிகர் விஜய் குறித்து ரசிகர் ஒருவரின் கேள்விக்கு மழுப்பல் பதில் கொடுத்துள்ள நடிகர் ஸ்ரீமனின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ரசிகர் ஒருவர் ஸ்ரீமனிடம், விஜிமா எதற்கு விக் போடுகிறார் என்று கேட்டார். இதற்கு பதில் கொடுக்காமல் கூட ஸ்ரீமன் போயிருக்கலாம். ஆனால், திக்கி திணறி மழுப்பலான பதில் கொடுக்க போய் அது நெட்டிசன்களின் கிண்டலுக்கு உள்ளாக்கியுள்ளது.

அவர் கூறியதாவது, "அவர் எது செய்தாலும் அது படக்குழுவின் முடிவாக  இருக்கலாம், அப்படி இல்லாமலும் இருக்கலாம். ப்ரோ.. படம் பாருங்க. நோ கமெண்ட்ஸ். இப்போதைக்கு கொரோனாவிற்கான அமைதியாக பிராத்தனைதான் முக்கியம். மாஸ்டர் படத்தில் என் நண்பன் விஜியை பார்ப்பீர்கள் என்று மழுப்பலாக பதில் கூறியுள்ளார்.


நடிகர் ஸ்ரீமன் இந்த பதிவிற்கு பதில் கொடுக்காமலே இருந்திருக்கலாம். ஆனால், அது படக்குழு முடிவாகவும் இருக்கலாம். அப்படி இல்லாமலும் இருக்கலாம் என எதற்கு மழுப்பல் பதில் கூற வேண்டும் என நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

--Advertisement--
Share it with your Friends