"கடவுளே.. உனக்கு இரக்கமே இல்லையா..? - இவர் டாக்டர் மட்டுமல்ல.." - பிக்பாஸ் பிரபலம் கண்ணீர் பதிவு..!


நடிகர் சேதுராமன். இவர் 2013ஆம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் பிரபலமானவர். சேதுராமன் நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பர் என்பதால் தமிழ்த் திரைப்படத்துறையில் கால் பதிப்பதற்கு நடிகர் சந்தானம் பெரும் உதவியாக இருந்தார். 

கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் உட்பட வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா மற்றும் 50/50 என இதுவரை நான்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.சினிமா மட்டுமல்லாமல் மருத்துவ துறையிலும் பிரகாசித்த இவர் உடல் நலம் குறித்து பல விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

அவ்வளவு ஏன், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூட கொரோனா குறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், இவருடைய இறப்பு செய்தி வந்ததை எவராலும் ஜீரணிக்க முடியாத ஒன்று. தகவல் அறிந்த ரசிகர்கள் பலரும் ஒரு நிமிடம் அதிர்ச்சியாகித்தான் போனார்கள். 

ரசிகர்கள் சினிமா பிரபலங்கள் எனபலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வரும் நிலையில் இது பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பிக் பாஸ் அபிராமி,"இது என் இதயத்தை நொறுக்குகிறது.? கடவுளுக்கு இரக்கம் இல்லையா.? வாழ்க்கை நிலையற்றதுனு தெரியும் ஆனாலும் இது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அவர் ஒரு மருத்துவர் மட்டும் இல்லை...? எனது நம்ப தகுந்த நண்பரும் கூட...உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும் என் நண்பரே" என்று மிகவும் சோகமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


--Advertisement--
Share it with your Friends