எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேனே..! - விரக்தியில் மதுவுக்கு அடிமையாகி கிடக்கும் முன்னணி நடிகை..!


கேரளாவை சேர்ந்த அந்த நடிகை அக்கட தேசத்தில் முன்னணி நடிகர் ஹீரோவாக நடித்த படம் மூலம் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். அவரை வாரிசு இயக்குநர் ஒருவர் தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்ததுடன் அவரை காதலித்து தனது பொண்டாட்டியாகவும் மாற்றிக்கொண்டார். 

யாரு கண்ணு பட்டதோ தெரியவில்லை, அந்த திருமணம் நிலைக்கவில்லை. கணவரை பிரிந்த பிறகு நடிகை மீண்டும் நடிக்க வந்தார். ஆனால், கணவரின் தந்தை திரையுலகில் பெரிய கை என்பதால் இயக்குனர்கள் அவருக்கு வாய்ப்பு வழங்க யோசித்தனர். இதனால், அவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. 

இதையடுத்து ஹீரோயின் என்று இல்லை எதுவாக இருந்தாலும் சரி என கிடைக்கும் கதாபாத்திரங்களை ஏற்றார். நாட்கள் செல்லச் செல்ல அந்த வாய்ப்புகளும் வரவில்லை. இதையடுத்து நடிகை விரக்தியில் மது போதைக்கு அடிமையாகிவிட்டாராம். 

எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேனே என்று தனது தோழிகளிடம் கூறி கதறிக் கதறி அழுகிறாராம். இந்நிலையில், நடிகை பிரபல பாலிவுட் நடிகர் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. 

இது குறித்து அறிந்த நடிகை நான் யார் கட்டுப்பாட்டிலும் இல்லை என்று சத்தியம் செய்தும் கூட அதை யாரும் நம்பத் தயாராக இல்லை. பட வாய்ப்புக்காக ஆடையை துறந்தும் பார்த்து விட்டார். ஆனால், இந்த போதை விஷயத்தால் தான் அம்மணியின் தமிழ் சினிமா கெரியர் படுத்துவிட்டதாம். 

நடிகையின் கையில் தற்போது இரண்டு படங்கள் உள்ளன. இரண்டுமே வேற்று மொழி படங்கள் ஆகும். ஏற்கனவே, இருக்கும் பிரச்சனை போதாது என்று இப்போது குடித்து குடித்து அவர் முகம் வற்றி விகாரமாக மாறிவிட்டதாம்.

எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேனே..! - விரக்தியில் மதுவுக்கு அடிமையாகி கிடக்கும் முன்னணி நடிகை..! எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேனே..! - விரக்தியில் மதுவுக்கு அடிமையாகி கிடக்கும் முன்னணி நடிகை..! Reviewed by Tamizhakam on March 01, 2020 Rating: 5
Powered by Blogger.