மாஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் காணாமல் போன விஜய் - வைரலாகும் புகைப்படம் - புதிய ரிலீஸ் தேதி..!


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்துள்ள மாஸ்டர் படத்தை வரும் ஏப்ரல் மாதம் 9ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர். 

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவி ஒரு நாள் தேசிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த பிரச்சனை எல்லாம் மார்ச் மாதம் இறுதியில் தீர்ந்துவிடும், அதனால் ஏப்ரல் 9ம் தேதியே படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று படக்குழு திட்டமிட்டது. 

ஆனால், தற்போது பிரதமர் மோடி அவர்களின் ஆணைப்படி 21 நாட்கள் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதனால் மாஸ்டர் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் ரீலீஸை ஜூன் மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளார்களாம்.

மேலும், வீட்டிலேயே இருங்கள். பாதுகாப்பாக இருங்கள் என பலரும்வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில், மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருந்த விஜயும் வீட்டுக்கு போய் விட்டார். அதனால், நீங்களும் வீட்டிலேயே இருங்கள் என கூறுவது போல ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் இல்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது. --Advertisement--
Share it with your Friends