முதன் முறையாக தைரியமான கதாபாத்திரத்தில் வெயில் பட நடிகை பிரியங்கா நாயர்..!


தமிழ் திரைத்துறையில், ‘வெயில்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர், பிரியங்கா. இதை தொடர்ந்து மலையாள படங்களிலும் வளம் வந்தவர் தான் இவர். 

தமிழில் சில படங்கள் மட்டுமே நடித்திருக்கிறார் என்றாலும் இவரை தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். இவர் இயக்குனர் லாரன்ஸ் ராம் என்பவரை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். 

திருமணத்துக்குப் பிறகு இருவரும் சென்னையில் தான் வசித்து வந்தார்கள். இதை தொடர்ந்து, 2013 ஆம் ஆண்டு இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு கணவரிடம் விவாகரத்து கோரி, பிரியங்கா மனு தாக்கல் செய்திருந்தார். 

அவர் அளித்த மனுவில், நாங்கள் தனிமையில் இருக்கும் புகைப்படங்களை வலைத்தளத்தில் பதிவிட்டார், மேலும் படத்தில் நடிக்க கூடாது என்று தடுத்தார் இதன் காரணமாக விவாகரத்து கேட்டுள்ளார் என்று குறிப்பிட்டிருந்தது.

இந்த சம்பவம் திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மீண்டும் தற்போது சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கிறார் பிரியங்கா.

இதை தொடர்ந்து அவர் தற்போது அவரது சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில், "உற்றான்" என்ற படத்தில் நடித்துள்ள அவர் அந்த படத்தில் காவல் நிலையத்தில் வரும் காட்சி ஒன்றில் தைரியமாக நடித்துள்ளார்.

மேலும், மற்றோடு காட்சியில் ஹீரோவுடன் மிகவும் நெருக்கமான நடித்துள்ளார் என்று படத்தின் இயக்குனர் ஓ.ராஜா கஜினி தெரிவிதிருந்தார். இந்த தகவல் ரசிகர்கள் ஷாக் ஆக்கியது.

ஆனால், 2020 ஜனவரி இறுதியில் வெளியான இந்த படம் வந்த இடம் தெரியாமலும் போன தடம் தெரியாமலும் போய் விட்டது.

முதன் முறையாக தைரியமான கதாபாத்திரத்தில் வெயில் பட நடிகை பிரியங்கா நாயர்..! முதன் முறையாக தைரியமான கதாபாத்திரத்தில் வெயில் பட நடிகை பிரியங்கா நாயர்..! Reviewed by Tamizhakam on March 14, 2020 Rating: 5
Powered by Blogger.