ராதிகா எனது அம்மா கிடையாது - அவரை, இப்படி தான் அழைப்பேன் - நடிகை வரலக்ஷ்மி அதிரடி பேச்சு..!


நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடிகை ராதிகா சரத்குமாரை தன்னுடைய அம்மா எல்லாம் கிடையாது என்று அதிரடியாக கூறியுள்ளார்.

நடிகர் சரத்குமார் மற்றும் சாயா என்பவருக்கும் 1984-ம் ஆண்டு திருமணம் ஆனது. இந்த தம்பதிக்கு பிறந்த இரண்டு பெண் குழந்தைகளில் ஒருவர் தான் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். மற்றொருவர் பெயர் பூஜா சரத்குமார். 

இந்நிலையில், கடந்த 2000-ம் ஆண்டு நடிகர் சரத்குமார் தனது மனைவி சாயை-வை விவாகரத்து செய்து விட்டு 2001-ம் ஆண்டு நடிகை ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆனால், நடிகை ராதிகாவிற்கு மூன்றாவது கணவர் நடிகர் சரத்குமார்.

நடிகை ராதிகா ஏற்கனவே, ரிச்சர்ட் ஹார்டி என்பவரிடம் விவாகரத்து பெற்று நடிகர் பிரதாப் போத்தனை திருமணம் செய்து அவரையும் விவாகரத்து செய்தார். அதனை தொடர்ந்து மூன்றாவதாக தான் நடிகர் சரத்குமாருடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை வரலட்சுமி சரத்குமார் அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். இதில் பல விஷயங்களை பற்றி பேசி வந்தார். அதில் குறிப்பாக, நான் ராதிகா அவர்களை ஆண்ட்டி என்று தான் அழைப்பேன் ஏனென்றால் அவர்கள் எனது தாய் கிடையாது. 

அவர் எனது அப்பாவின் இரண்டாவது மனைவி, எனக்கு தாய் என்றால் அது ஒருவர் மட்டும் தான். ஏன் அனைவருக்கும் ஒரே ஒரு தாய் தான். மேலும் அதனால் அவர் எனக்கு அம்மா கிடையாது, அவர் எனக்கு ஆண்ட்டி தான். 

ஆனாலும், நான் அவரை எனது தந்தை சரத்குமார் அவர்களுக்கு ஈடாக மரியாதையை வைத்து இருக்கிறேன் என்று கூறியுள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

ராதிகா எனது அம்மா கிடையாது - அவரை, இப்படி தான் அழைப்பேன் - நடிகை வரலக்ஷ்மி அதிரடி பேச்சு..! ராதிகா எனது அம்மா கிடையாது - அவரை, இப்படி தான் அழைப்பேன் - நடிகை வரலக்ஷ்மி அதிரடி பேச்சு..! Reviewed by Tamizhakam on March 01, 2020 Rating: 5
Powered by Blogger.