"இப்படிபட்டவர்களை பார்த்தால் ஆத்திரம் வருகிறது" - நடிகை ரம்யா பாண்டியன் காட்டம்..!


ஜோக்கர், டம்மி டப்பாஸு, ஆண் தேவதை என நடிகை ரம்யா பாண்டியன் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளவர் ரம்யா பாண்டியன். அந்த படங்கள் ஓரளவு நல்ல வரவேற்பையே பெற்றன. 

ஆனால் அதையெல்லாம் தாண்டி பெரிய அளவில் அவரை வைரலாகியது வீட்டின் மொட்டை மாடியில் தன்னுடைய இடுப்பு மடிப்பு தெரியும் படி அவர் நடத்திய போட்டோ ஷூட் தான். 

சேலையில் அவர் கவர்ச்சியாக போஸ் கொடுத்திருந்த புகைப்படங்கள் அப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி ட்ரெண்டானது. அதன் பிறகு விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன் பங்கேற்றார்.

தற்போது உலக மக்களை அச்சுறுத்தி வரும் "கொரோனா"  தாக்குதல் பற்றி சில கருத்துக்களை கூறியுள்ளார் அம்மணி. அவர் கூறுகையில், மக்கள் விழிப்புணர்வு இன்றி இருக்கிறார்கள். சாலைகளில் அலையும் ஆட்களை பார்த்தால் ஆத்திரம் ஏற்படுத்துகிறது. வீணாக வெளியில் திரிவதால், நமக்கு நோய் தொற்று ஏற்படும் என்பதோடு, நம்மால் பிறருக்கும் பரவ வாய்ப்புண்டு என்பதை, இந்த நபர்கள் அறிய வேண்டும் என்று கட்டமாக கூறியுள்ளார்."இப்படிபட்டவர்களை பார்த்தால் ஆத்திரம் வருகிறது" - நடிகை ரம்யா பாண்டியன் காட்டம்..! "இப்படிபட்டவர்களை பார்த்தால் ஆத்திரம் வருகிறது" - நடிகை ரம்யா பாண்டியன் காட்டம்..! Reviewed by Tamizhakam on March 31, 2020 Rating: 5
Powered by Blogger.