என் ரசிகர்கள் யாரும் இதற்கு வரவேண்டாம் - நடிகர் விஜய் திடீர் முடிவு..! - என்ன காரணம்..?


நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து விட்ட நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் (Post Production) பணிகள் நடைபெற்று வருகின்றது.

அடுத்தபடியாக படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடக்கவுள்ளது. இந்நிலையில், நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர்கள் யாரும் இசை வெளியீட்டு விழாவிற்கு வரவேண்டாம் என்று முடிவு எடுத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிடம் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் விஜய்யின் இந்த திடீர் முடிவு எதற்காக என்று விசாரித்த போது, தன்னை பார்க்க வரும் ரசிகர்கள் காவல் துறையினரிடம் அடி வாங்குவதை தன்னால் பார்க்க முடிவில்லை என்பதால் தான் தளபதி விஜய் இப்படிப்பட்ட ஒரு முடிவை எடுத்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.

பொதுவாக விஜய் படங்களின் இசை வெளியீட்டு விழா என்றாலே இப்படியான பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது. ஆனால், பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களே ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் அளவுக்கு நிலைமை கட்டுக்குள் இல்லாமல் போகவே ரசிகர்களை போலீஸ் தடியடி நடத்தி கலைக்க வேண்டிய சூழ்நிலை வந்தது.

அடி வாங்கி ரத்த காயத்துடன் நின்ற விஜய் ரசிகர்கள் மீடியா முன்பு வந்து தாங்கள் வைத்திருந்த ஒரிஜினல் டிக்கெட்டுகளை காட்டி பேட்டி கொடுத்தால் விஜயின் இமேஜ் டேமேஜ் ஆகியது. இதனால் தான விஜய் இந்த முடிவை எடுத்துள்ளார் என்றும் கூறுகிறார்கள்.

என் ரசிகர்கள் யாரும் இதற்கு வரவேண்டாம் - நடிகர் விஜய் திடீர் முடிவு..! - என்ன காரணம்..? என் ரசிகர்கள் யாரும் இதற்கு வரவேண்டாம் - நடிகர் விஜய் திடீர் முடிவு..! - என்ன காரணம்..? Reviewed by Tamizhakam on March 03, 2020 Rating: 5
Powered by Blogger.