தன்னை "ஆண்ட்டி" என்று அழைத்த நபருக்கு வரலக்ஷ்மி கொடுத்த பதிலை பாத்திங்களா..?


போடா போடி என்ற படத்தின் மூலம் 2012ஆம் வருடம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் வரலக்ஷ்மி சரத்குமார். சிம்புவுடன் மிக நெருக்கமாக இந்த படத்தில் நடித்திருப்பார். 

இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதற்குப்பின் நான்கு வருடங்களாக பட வாய்ப்பு இல்லாமல் மீண்டும் தாரை தப்பட்டை படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அந்த படத்தில் கூட சரக்கும் தம்மும் என்று சில வதந்திகள் கிளம்பியது. பாலா கொடுத்த அந்த பட வாய்ப்பிற்கு பின் அடுத்தடுத்து முன்னணி நடிகருடன் நடிப்பதற்கான வாய்ப்பு குவிந்தது. 

விக்ரம் வேதா படத்தில் கதிருக்கு ஜோடியாக நடித்து இருந்த கதாபாத்திரம் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது. பின்பு சண்டக்கோழி 2, சர்க்கார், மாரி-2 என்று அடுக்கடுக்காக படங்கள் வெளிவந்து அவரது மார்க்கெட் தமிழ்சினிமாவில் எகிறி விட்டது என்றே கூறலாம். 

இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டால் வாய்ப்புகள் கொடுக்கிறோம் என்று தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள் கூறியதாக பரபரப்பை ஏற்படுத்தினார். 

இந்நிலையில், இவரது பிறந்தநாளான மார்ச் 5-ம் தேதியன்று பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து கொண்டிருந்தனர். ஆனால், ஒரு நெட்டிசன் மட்டும் "ஆன்ட்டி" உங்களுக்கு 35 வயசா..? என அவரது வயதை கிண்டலடித்தார்.

நம்ம ஊரில் அடிக்கடி ஒரு விஷயம் சொல்வார்கள். பெண்களிடம் அவர்களுடைய வயசை கேக்க கூடாது..! ஆண்களிடம் அவர்களுடைய சம்பளம் எவ்வளவு என்று கேட்க கூடாது..! என்று.

இது தெரியாத அந்த நபர்வரலக்ஷ்மியின் வயதை கேலி செய்யும் படி கருத்து பதிவிட்டதால் கடுப்பான வரலக்ஷ்மி, "யெஸ், அங்கிள் ஏதாவது பிரச்னையா..?" என்று அவரை திருப்பி கலாய்த்துள்ளார்.தன்னை "ஆண்ட்டி" என்று அழைத்த நபருக்கு வரலக்ஷ்மி கொடுத்த பதிலை பாத்திங்களா..? தன்னை "ஆண்ட்டி" என்று அழைத்த நபருக்கு வரலக்ஷ்மி கொடுத்த பதிலை பாத்திங்களா..? Reviewed by Tamizhakam on March 06, 2020 Rating: 5
Powered by Blogger.