"சிக்ஸ் பேக் ஆன் தி வே" - தொப்பையும் தொந்தியுமாக இருக்கும் புகைப்ப்டத்தை வெளியிட்ட நடிகை..!


ஜெமினி, வில்லன், அன்பே சிவம், நியூ உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்தார் கிரண். 

பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆம்பள படத்தில் நடித்தார். அதற்கு பின்னர் தமிழ் சினிமா பக்கம் கிரணை பார்க்கவே முடியவில்லை. இளசுகளின் கனவு கன்னியாக வலம் வந்த இவர் ஹீரோயினுக்கு அம்மா ரோலில் நடிக்கும் நிலைக்கு வந்துவிட்டார். 

தற்போது 38 வயதாகும் கிரண் இணையத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை மட்டும் மறக்கவில்லை. படவாய்ப்புக்காகத் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டு வரும் இவர் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

சமீப காலமாக படு கவர்ச்சியாக உடை அணிந்து சமூக வலைதளங்களில் இஷ்டத்துக்கு போட்டோக்களாக போட்டுத் தள்ளுகிறார். ஆபாச பட நடிகையை போல இருக்கிறீர்கள், வயதுக்கு ஏற்ற மாதிரி அடக்க ஒடுக்கமா டிரெஸ் பண்ணுங்க என நெட்டிசன்கள் அட்வைஸ் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சிக்ஸ் பேக் ஆன் தி வே என கூறி தொப்பையும் தொந்தியுமாக இருக்கும் ஒருகிளிப்பிங்கை பதிவு செய்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் அவரை ஏகத்துக்கும் கலாய்த்து வருகிறார்கள்.

"சிக்ஸ் பேக் ஆன் தி வே" - தொப்பையும் தொந்தியுமாக இருக்கும் புகைப்ப்டத்தை வெளியிட்ட நடிகை..! "சிக்ஸ் பேக் ஆன் தி வே" - தொப்பையும் தொந்தியுமாக இருக்கும் புகைப்ப்டத்தை வெளியிட்ட நடிகை..! Reviewed by Tamizhakam on March 29, 2020 Rating: 5
Powered by Blogger.