திமுக-வின் நயன்தாரா இந்த பெறுப்பில் இருக்கிறார் - நடிகர் ராதாரவி விளாசல்..!


திமுக-வின் கொள்கை பரப்பு செயலாளர் நயன்தாராவை பற்றி பேசிவிட்டதால் என்னை அந்த கட்சியில் இருந்து நீக்கிவிட்டார்கள் என நடிகர் ராதாரவி விமர்சித்துள்ளார். 

திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இந்து முன்னணி சார்பில் நடந்த போராட்டத்தில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டார். அவர் பேசுகையில் கருணாநிதி புத்திசாதூர்யம் உள்ளவர். 

அவர் இருந்திருந்தால் சிஏஏவை ஆதரித்து இருப்பார். திமுகவில் தலைமை சரியில்லை, இதனால் பல நல்லவர்கள் என்ன செய்வது என தெரியாமல் முழிக்கிறார்கள். ஸ்டாலினுக்கு தமிழகத்தில் கிழக்கு மேற்கு எது என்றே தெரியவில்லை. 

அவர் (ரஜினி) நடிகரும் இல்லை அரசியல்வாதியும் இல்லை. போருக்கு தயாராகி விடுவேன் என்கிறார். அந்த அளவிற்கு எல்லாம் செல்லாது. எங்களுக்கும் எல்லாம் தெரியும். சந்தனப்பொட்டு வைத்திருப்பதால் இளிச்சவாயன் என நினைக்க வேண்டாம். 

தந்தை பெரியார் சிலை உடைப்புக்கு முழுமுதற்காரணம் வீரமணிதான். தாலி அறுக்கும் போராட்டம் நடத்துகிறார். தினமும் சாலைகளில் தாலி அறுக்கிறார்கள். அவர்களை சேர்த்துக் கொள்வாரா? பூணூல் அறுக்கும் போராட்டம் என சில ஆண்டுகளுக்கு முன்பு நடத்தி விட்டார்கள். 

வீரமணி உள்ளவரை திமுக உருப்படாது. தமிழகம் முழுவதும் வெறும் 1500 பேரை வைத்துக் கொண்டு தொல்லை பண்றாங்க. திமுகவினர் தங்கள் பள்ளியில் இந்திதான் கற்று தருகிறார்கள். அங்கு தமிழ் பேசினால் குற்றம். தமிழில் பேசினால் அபராதம் வசூலிக்கிறார்கள்.

ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தியவர்களின் லட்சணம் இது தான். ஏமாளியாக இருந்து விடாதீர்கள். அனைவரும் இந்தி கற்றுக் கொள்ளுங்கள். 

திமுக கொள்கை பரப்பு செயலாளர் நயன்தாரா பற்றி பேசி விட்டேனாம் , என்னை கட்சியில் இருந்து தூக்கிவிட்டார்கள். இருட்டில் இருந்தேன் ஒரு வெளிச்சம் வந்தது அதன் மூலமாக தற்போது பாஜகவில் இணைந்துள்ளேன். இதன் நன்மைகளை கண்டபின் அனைவரையும் பாஜகவில் சேர வலியுறுத்துகிறேன். 

பல நடிகர்கள் பாஜகவில் சேர உள்ளார்கள் நடிகர் கார்த்திக்கிடம் பாஜகவில் சேருமாறு பேசியுள்ளேன் என்றார். தமிழகத்தில் பா.ஜ.க தனிப்பெரும் சக்தியாக உருவெடுக்கும் காலம் அருகில் தான் உள்ளது என கூறியுள்ளார்.

திமுக-வின் நயன்தாரா இந்த பெறுப்பில் இருக்கிறார் - நடிகர் ராதாரவி விளாசல்..! திமுக-வின் நயன்தாரா இந்த பெறுப்பில் இருக்கிறார் - நடிகர் ராதாரவி விளாசல்..! Reviewed by Tamizhakam on March 04, 2020 Rating: 5
Powered by Blogger.