மாஸ்டர் ரிலீஸ் தேதி குறித்து வெளியான சற்றும் எதிர்பாராத தகவல் - ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!


உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவமால் இருக்க தடுப்பு நடவடிக்கையாக வரும் 31ம் தேதி வரை தமிழகத்தில் கல்வி நிலையங்கள், ஷாப்பிங் மால், தியேட்டர்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. 

இதனையொட்டி திரைப்பட படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக இந்த வாரம் ரிலீசாக வேண்டிய படங்கள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் தள்ளிப்போய்யுள்ளன. இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் ரிலீசும் தள்ளிப்போகும் என தகவல் வெளியானது. 

ஆனால், படக்குழுவிடம் விசாரித்ததில் படம் திட்டமிட்டப்படி ஏப்ரல் 9ம் தேதி வெளியாகும் என கூறுகிறார்கள். தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்திற்குள்ளாக நிலைமை சீராகும் என எதிர்பார்ப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்துள்ள மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு, கடந்த ஞாயிறு மாலை சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு விஜய் பேசியது சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காகியுள்ளது.

ஆனால்,சொன்ன தேதியில் படம் ரிலீஸ் ஆகுமா என்ற சந்தேகம் விஜய் ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது. இந்நிலையில், படம் திட்டமிட்ட படி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

--Advertisement--
Share it with your Friends